Sunday, August 22, 2010

The Cabinet of Dr. Caligari

                                      நல்ல சினிமா ரசிகர்கள் யாரக்கேட்டாலும் சொல்லிருவாங்க..ஐரோப்பிய படங்கள் சினிமாவ கலையம்சத்துடன் பாவிச்சு வளர்த்துச்சா..ஹாலிவுட் திரைப்படங்களான்னு.திரைப்படங்கள் வளர ஆரம்பிச்ச காலகட்டத்துல ஐரோப்பிய சினிமாவே (இன்னும் குறிப்பா ஜெர்மன் திரைப்படங்களே) புதுசு புதுசா நிறைய பரிட்ச்சார்த்தமான முயற்சிகளிலும், புது வகை உத்திகளையும் அறிமுகப்படுத்தியது. ஜெர்மனியை தொடர்ந்து ரஷ்யா (அப்ப சோவியத்), பிரான்ஸ்...இன்னும் பல நாடுகள் இதைப் பின்பற்றி வளர ஆரம்பித்தது. அமெரிக்கா பாத்துச்சு..இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு சொல்லி மிரள வைக்கும் செட்டிங்க்ஸ், கவர்ச்சியான நாயகிகள், மேக்கிங் இதுல கவனம் செலுத்த ஆரம்பித்தது(இன்னைய வரைக்கும் அப்படித்தான் இருக்குன்னு எனக்குத் தோணுது). இதுல என்ன ஒண்ணுன்னா, நம்மாளுக ஹாலிவுட் படங்களை ஆதர்சமாக நெனச்சு அதைப் பின்பற்றி படம் எடுக்க ஆரம்பிச்சதுக்கு பதிலா,ஐரோப்பிய சினிமாவை நோக்கி திரும்பி இருந்தாங்கன்னா....அது எப்படிப்பட்ட விளைவா இருந்துருக்கும் (Culturally, Politically, Socially இப்படி எல்லா வகைகளிலும்). அப்படிப்பட்ட பரிட்ச்சார்த்தமான ஜெர்மனிய சினிமாவிற்கு இந்தப்படம் ஒரு சிறந்த உதாரணம்.

                                                      
1920ஆம் ஆண்டே இப்படி ஒரு உளவியல்ரீதியான திகில் கதையை அவர்கள் எடுத்திருந்த விதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. சும்மா இல்லாம நெட்ல Worlds Greatest Horror Films அந்த மாதிரிலாம் தட்டிப்பார்க்கைல இந்தப்படத்த அடிக்கடி பார்த்திருக்கேன். சரி..என்னதான் இருக்கு,பார்க்கலாமேன்னு நெனச்சு பார்த்த..சரியான படம். கிளைமாக்ஸ ஒருவாறு ஊகிக்க முடிஞ்சாலும், கடைசி நிமிசத்திலையும் ஒரு ட்விஸ்ட் வரும் பாருங்க..செமையா இருந்துச்சு. நீங்களும் பாருங்க. உங்களுக்கும் கண்டிப்பா பிடிக்கும்.இந்தப்படத்தை இன்றளவும் யாராலும் சிறப்பான முறையில் ரீமேக் செய்ய முடியவில்லை. இனி கொஞ்சம் படக்கதைய பார்ப்போம்.
..........................

                                      ஒரு பூங்கா.அதில் ஒரு பெஞ்ச்.ஒரு இளைஞன் (பிரான்சிஸ்)+பெரியவர். பிரான்சிஸ் பெரியவரிடம் தனக்கு நேர்ந்த ஒரு நிகழ்ச்சியை விவரிக்க ஆரம்பிக்கிறான்.

ஹோஸ்டேன்வால், ஒரு சிறிய ஜெர்மனிய கிராமம்:

அங்கே ஒரு கண்காட்சி நடந்துகொண்டிருக்கிறது. அதில் நடக்கும் பல வகையான வேடிக்கை நிகழ்ச்சிகளை மக்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் அங்கே ஒருவர் வருகிறார். கண்காட்சி மேலாளரை கவனித்த பிறகு தன் நிகழ்ச்சியை அங்கே நடத்த அனுமதிக்கப்படுகிறார்.தன்னிடம் தூக்கத்தில் நடக்கும் வியாதி கொண்ட ஒரு ஆள் இருப்பதாகவும் (Somnambulist)-அவ்வியாதியினால் நிறைய குழப்பம் விளைந்ததனால் அவனை ஆழ்ந்த உறக்கத்தில் வைத்திருப்பதாகவும்-அவனை காண ஆவலாக இருக்கின்றீர்களா? என்று மக்களிடம் அறிவிப்பு செய்கின்றார். யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவதாய் இல்லை. அதைக்கண்ட அவர் ஒரு மர்மப் புன்னகை செய்கிறார்.யார் இவர்-அவர்தான் Dr.கேலிகாரி. அன்றிரவே அந்த கண்காட்சியின் அலுவலக உதவியாளர் குத்திக் கொல்லப்படுகிறான்.


இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரான்சிசும் அவனது நண்பன்-ஆலனும் அந்த கண்காட்சிக்குச் செல்ல தீர்மானிக்கின்றனர். அவர்கள் அங்கே போய்ச்சேரும் பொழுது கேலிகாரி உற்சாகமாக அறிவிப்பு செய்து கொண்டிருக்கிறார். தன்னிடம் உள்ள ஆள் 25 வருடமாக தூங்குவதாகவும், இன்று அவனை தான் எழுப்பப் போவதாகவும்-முக்கியமாக அவனால் உங்களது எதிர்காலத்தை கணித்து கூற முடியும் என்றும் கூறிவிட்டு அவனை (சிசர்) விழித்துக்கொள்ள ஆணையிடுகிறார். அவன் மெல்ல மெல்ல விழிப்படைகிறான். மக்கள் உற்சாகமாக கை தட்டுகின்றனர். அனைவரையும் முந்திக்கொண்டு ஆலன் “நான் எத்தனை காலம் வாழ்வேன்?” என்று கேட்கிறான். பதில்: விடியும் வரை. யாருக்கும் இந்த மாதிரி பதிலைக் கேட்டால் கதிகலங்கி விடும் தானே. ஆலன் மிகுந்த கலக்கமுறுகிறான். இருந்தாலும் பிரான்சிஸ் வேடிக்கையாக தங்கள் இருவரின் மனங்கவர்ந்த ஜேன் என்ற பெண்ணைப்பற்றி பேசி அவனை சகஜ நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்கிறான்.ஆனாலும் ஆலனின் குழப்பம் தீரவில்லை.


அன்றிரவு, ஆலன் ஒரு உருவத்தால் கொடூரமாகக் குத்திக்கொலை செய்யப்படுகிறான். பிரான்சிஸ் Dr.கேலிகாரியையும் சிசரையும் சந்தேகப்பட்டு போலீசிடம் (அவர்கள் அசிரத்தையாக ஏற்றுக்கொண்டாலும் ) புகார் அளிக்கிறான். மறுநாள் இந்த வகையிலேயே இன்னொரு கொலையும் அதன் கொலைகாரனும் பிடிபட-போலீஸ் அவன்தான் மற்ற கொலைகளையும் செய்தான் என்று நம்புகின்றனர். ஆனால் அவன் மற்ற ரெண்டு கொலைகளையும் செய்யவில்லை என்று தெரிந்து மிகுந்த குழப்படைகின்றனர். இந்நிலையில் ஜேன் மறுபடியும் ஒரு உருவத்தால் கடத்தப்பட...மிகுந்த குழப்பம் ஏற்படுகின்றது. இதற்குப் பிறகு வரும் காட்சிகளை நீங்கள் பார்ப்பதே உத்தமம்..இந்நேரம் நீங்கள் ஊகிக்க முயன்றிருப்பீர்கள். சிசர்-கொலைகாரனா? அல்லது Dr.கேலிகாரியே தானா? அல்லது வேறு யாருமா?. உங்களால் அனைத்தையும் ஊகிக்க முடிந்தாலும், கடைசியில் வரும் திருப்பத்தை கண்டிப்பாக ரசிப்பீர்கள்.


சரி..ஏன் இந்தப்படம் இன்றளவும் உலகின் முதல் அசலான திகில் படமாகக் கருதப்படுகிறது..வழக்கம்போல விக்கிபீடியா மாதிரியான தளங்களுக்கு போய் தெரிஞ்சுகிட்டது போக..நான் கவனிச்ச வரையில்..கேமரா, செட்டிங்க்ஸ் ரெண்டுமே அந்த மூட் க்கு ஏத்த மாதிரி அருமையா இருந்திச்சு. குறிப்பா செட்டிங்க்ஸ் எவ்வளவு பொருத்தாமானது என்று முழு படத்தையும் பார்த்தீங்கன்னா தெரியும். இந்தப் படத்தை one of the most influential of Expressionist films என்று இன்றளவும் கொண்டாடுகிறார்கள். மேலும் இந்தப்படத்தில் வரும் கேலிகாரி கதாபாத்திரம் சிக்மண்ட் ஃபராடை குறிப்பதாகவும் சிலர் சொல்கின்றனர் (ஃபராடும் ஜெர்மனி..அவர் பீக்ல இருந்த காலகட்டம் 1900-1930). சரி இந்தப்படத்திற்கு முன்னாடி திகில் படமே வந்ததில்லையா? நியாயமான கேள்வி. இதே கேள்வி தான் எனக்கும் தோன்றியது. அது குறித்து தேடிய போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

எல்லோரும் படிச்சிருப்போம் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூமியர் சகோதரர்கள் தான் 1895ல் முதன்முதலாக சினிமேட்டோகிராஃபே என்ற ப்ரொஜெக்டர், ஒரு சலனப்படங்களை படம்பிடிக்கும் கேமரா, படம் செறிவூட்டும் ஒரு கருவி-இது மூன்றையும் ஒன்றாக கண்டுபிடித்தனர். இதே காலகட்டத்தில் பல நாடுகளில் சலனப்படங்களை படம்பிடிக்கும் கேமரா(motion picture camera) கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்கின்றனர். ஆனால் 1891லேயே எடிசன் ஒரு ஆள் மட்டும் பார்க்கக்கூடிய கைனேடோஸ்கோப் என்ற கருவியை கண்டுபிடித்து சலனப்படங்களை காட்டியதாகவும் சொல்கின்றனர். இருந்தபோதிலும் அனைவரும் ஒத்துக்கொண்டது- லூமியர் சகோதரர்கள்தான் முதன் முதலில் சலனப்படங்களை நிறைய மக்கள் பார்க்கும்படி படம்பிடித்து வெளியிட்டனர். Workers Leaving the Lumiere Factory (1895) என்ற அந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர். அந்தப் படத்தை கீழே காணலாம். இது முடிந்து அவர்கள் அந்த கருவியை பிரபலப்படுத்த இந்தியாவிற்கும் சுற்றுப்பயணம் வந்துள்ளனர்.


(ஆனால் முதன்முதலில் (1888) சலனப்படங்களை பிரான்சின் லூயி-லே-பிரின்ஸ் என்பவர்தான் பதிவு செய்தார் என்றும், ஆனால் அவர் பொதுமக்களுக்கு அதை காட்டும் முன்னர் மர்மான முறையில் மறைந்து விட்டார் என்றும்-அவரைப்பற்றி பின் எதுவும் தெரியவில்லை என்றும் கூறுகின்றனர். அவர் எடுத்த Roundhay Garden Scene (2 sec), உலகின் முதல் அசையும் படங்களை ஒரே படச்சுருளில் பதிவு செய்த படம் என்று கூறுகின்றனர். அதைக் கீழே காணலாம்.)


இந்தியாவிலும் இது போன்று வெளிச்சத்திற்கு வராத பல திரைப்பட முன்னூடிகள் உண்டு. இந்தியாவிலேயே முதன் முதலில் திரைப்படம் காட்டிய தமிழர் வின்சென்ட் சாமிக்கண்ணு தென்னிந்தியாவில் முதன்முதலில் படம் எடுத்த (கீசகவதம், பால்கேவுக்கு முன்னாடியே) நடராஜ முதலியார் இந்த மாதிரி.

சரி திகில் படத்துக்கு வான்னு சொல்றீங்களா...அது ஜார்ஜ் மெல்லீஸ் என்பவர் 1896ல் எடுத்த Le Manoir du diable ( "The House of the Devil") என்ற வேம்பையர் படம்தான். அது முன்று நிமிடத்திற்கும் குறைவான அளவே இருந்தது. இருந்தாலும் மக்களின் ஆர்வத்தைப் பார்த்து மெல்லீஸ் மேலும்மேலும் இது மாதிரி டைப்ல ரெண்டு-மூனு நிமிட படங்களை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
அப்படியே கொஞ்சகொஞ்சமாக இந்த வகையான படங்கள் நிறைய வரத்தொடங்கியுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம்..முக்கால்வாசி படங்கள் ஜெர்மன் படங்களாகவே இருந்தன.இதில் Nosferatu வெர்னெர் ஹெர்ஸாக்கால் ரீமேக் செய்யப்பட்டது நம் எல்லோருக்கும் தெரியும். இந்தப்படத்தையும் “M” படப்புகழ் Fritz Langதான் இயக்குவதாக இருந்ததாம். கீழே அந்த காலகட்டத்தில் வெளியான புகழ்பெற்ற ஜெர்மனியப் படங்கள். )

1919 The Cabinet of Dr. Caligari                    Robert Wiene                       Germany
 1922 Nosferatu                                               F. W. Murnau                       Germany
1924 The Last Laugh                                       F. W. Murnau                       Germany
1925 The Street of Sorrow                              G. W. Pabst                          Germany
1926 Metropolis                                              Fritz Lang                             Germany
1927 Sunrise                                                   F. W. Murnau                       Germany
1929 The Blue Angel                                     Josef Von Sternberg              Germany
1930 All Quiet on the Western Front            Lewis Milestone                    Germany
1931 M                                                          Fritz Lang                              Germany

Facebookers..

11 comments :

  1. Nosferatu பாத்திருக்கேன்,இது பத்தி பத்தி படிச்சிருக்கேன் விக்கியிலே,அப்புறம் உங்க தளத்தில் இப்போ,நல்லா எழுதுனீங்க,குழந்த.ஃபெல்லினியின் அமர்காட் என்னும் படமும் அவசியம் பாருங்க,செம வித்தியாசமான படம்

    ReplyDelete
  2. @கீதப்ப்ரியன்
    பாஸ்..நீங்களே பார்க்காத படமா!
    ஃபெல்லினியின் பல படங்கள் பார்க்கனும்ன்னு நெனச்சு வெச்சிருக்கேன்.

    ReplyDelete
  3. Download link-கு நன்றி! சீக்கிரமே பார்த்துவிடுகிறேன்.

    ReplyDelete
  4. அருமையா இருந்துதுங்க உங்க விமர்சனம்...அதிலும் பல தகவல்கள்.. ஆனா திகில் படங்கள் எனக்கு அவ்வளாவா பிடிக்காது... :)

    நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன் :)

    ReplyDelete
  5. படத்தை பார்த்தேன் நீங்க சொன்ன மாதிரி நல்லாத்தான் இருந்தது! மிக்க நன்றி!

    ReplyDelete
  6. @சு.மோகன்
    சு.மோ நன்றி

    @kanagu
    நேரம் கிடைக்கிற போது அவசியம் பாருங்க.

    @எஸ்.கே
    மனம்+ எழுதுரவர்க்கு இந்தப்படம் பிடிக்கலைன்னாதான் ஆச்சரியம்

    ReplyDelete
  7. நண்பரே,

    நீங்கள் உங்கள் பதிவில் கூறியிருக்கும் ஒரு சலனச் சித்திரத்தைக்கூட நான் பார்த்ததில்லை. உங்கள் மூலம் சுவையான தகவல்களை அறிந்து கொள்வதில் உவகை கொள்கிறேன்.

    ReplyDelete
  8. @கனவுகளின் காதலன்
    மிக்க நன்றி..
    //சலனச் சித்திரத்தைக்கூட //
    ஸ்ஸ்ஸ்....முடியல

    ReplyDelete
  9. அருமையான பதிவு.இப்படங்கள் ஒன்றைக்கூட நானும் பார்த்ததில்லை. விரைவில் பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  10. @உலக சினிமா ரசிகன்
    சார்..சீக்கிரம் பார்க்க முயற்சி செய்யுங்கள்

    ReplyDelete
  11. கொழந்த சார் நீங்க பாலா சார் பதிவுல சொன்னீங்கல்ல! முக்கியமான சாப்ட்வேர் பத்தி ஒரு பதிவுகளை போட சொல்லி! அதான் மென்பொருட்கள் மற்றும் அதன் உபயோகங்கள் பற்றி அடிப்படையில் இருந்து ஒரு தொடரா எழுதப் போறேன். முதல் பதிவை பார்த்துட்டு சொல்லுங்க. நன்றி!

    ReplyDelete