Saturday, August 28, 2010

மால்கம் X


Brothers and sisters, I am here to tell you that I charge the white man. I charge the white man with being the greatest murderer on earth. I charge the white man with being the greatest kidnapper on earth. There is no place in this world that this man can go and say he created peace and harmony. Everywhere he's gone he's created havoc. Everywhere he's gone he's created destruction. So I charge him. I charge him with being the greatest kidnapper on this earth! I charge him with being the greatest murderer on this earth! I charge him with being the greatest robber and enslaver on this earth! I charge the white man with being the greatest swine-eater on this earth. The greatest drunkard on this earth! He can't deny the charges! You can't deny the charges! We're the living proof of those charges! You and I are the proof. You're not an American, you are the victim of America. You didn't have a choice coming over here. He didn't say, "Black man, black woman, come on over and help me build America". He said, "Nigger, get down in the bottom of that boat and I'm taking you over there to help me build America". Being born here does not make you an American. I am not an American, you are not an American. You are one of the 22 million black people who are the victims of America.

                                           
படம் ஆரம்பிப்பதே மால்கம் Xன் இந்த வார்த்தைகளோடு தான்.பின் கொஞ்ச கொஞ்சமாக அமெரிக்க கொடி எரிந்து X சின்னமாக மாறுகிறது. யார் மால்கம் X ? மிதவாதியா? தீவிரவாதியா? ஏன் படுகொலை செய்யப்பட்டார்? வேண்டுமென்றே வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்டாரா? (நேதாஜிக்கும் இதான் நடந்தது) இதற்கான விடைகளை ஓரளவு இந்தப்படத்தின் மூலம் அறியலாம். இந்தப் படத்தை 4 பகுதிகளாக பிரிக்கலாம்.

ஆரம்பகால வாழ்கை:
            மால்கமின் தந்தை-பிரசங்கம் செய்பவர்-வேறு பிரிவைச்சேர்ந்த ஆட்களால் கொல்லப்படுகிறார். தாய்-மனநிலை பாதிக்கப்பட்டவராக அறிவிக்கப்படுகிறார். இந்த சூழ்நிலையில் வேறிடத்தில் வளரும் மால்கம் பின்னாளில் ஒரு சிறிய அடியாள் வகையறாவாக வளருகிறார். ஒரு கும்பலுடன் ஏற்படும் தகராறில் பாஸ்டனுக்கு இடம்பெயருகிறார். அங்கு தன் நண்பருடன் ஒரு திருட்டில் ஈடுபடும் பொழுது கைதாகிறார். நீதிமன்றத்தில் நண்பருக்கும் அவருக்கும் 10 ஆண்டுகள் தண்டனை கிடைக்கிறது. இந்த தண்டனை திருட்டிற்கு மட்டும்தானா..இல்லை. வெள்ளைக்கார பெண்ணுடன் தொடர்பு இருந்தமைக்காகவும் இத்தனை அதிக தண்டனை.

சிறைச்சாலை வாழ்க்கை:
                                                          
இங்கு தான் அவரது வாழ்கையில் பெரும் திருப்பம் ஏற்படுகிறது. சிறைச்சாலையில் பைன்ஸ் என்பவர்-நேஷன் ஆப் இஸ்லாம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்-மால்கமிடம் கொஞ்ச கொஞ்சமாகப் பேசி இஸ்லாமின்பால் அவருக்கு மதிப்பு வரச் செய்கிறார். மேலும் வெள்ளையர்கள் எப்படி திட்டமிட்டு கருப்பினதவர்களுக்கு எதிராக ஒவ்வொரு விஷயத்திலும் வெறுப்பை விதைத்தனர் போன்றவைகளையும் போதிக்கிறார்.தங்களது தலைவரான எலைஜா முஹம்மதின் அறிவுரைக்களையும் போதனைகளையும் கடிதங்களின் வாயிலாக மால்கமிற்கு அறிமுகப்படுத்துகிறார். இதெல்லாம் கேட்டு மால்கம் இஸ்லாமிற்கு மதம் மாறுகிறார்.

விடுதலை:
              சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்தவுடன் நேராக எலைஜா முஹம்மதிடம் சென்று நேஷன் ஆப் இஸ்லாம் அமைப்பின் கொள்கை செயலாளராக பதவியேற்கிறார். முழுமூச்சுடன் பணியாற்றுகிறார். தங்கள் மக்களுக்கென்று தனியாக ஒரு அமைப்பு தேவை என்றும், நாம் அடிவாங்கிக் கொண்டே இருப்பது போதும்-நம் பாதுகாப்பும் முக்கியம்-எனவே அஹிம்சை பாதை தேவையற்ற ஒன்று என்றும் கடும் பிரச்சாரம் மேற்க்கொள்கிறார்.


இந்நிலையில் ஒரு முக்கியமான சம்பவம் நடக்கிறது. அவரது அமைப்பைச் சேர்ந்த ஒருவனை போலீஸ் கடுமையாகத் தாக்கி கைது செய்கின்றனர். மால்கம் ஒரு சிறிய கூட்டத்துடன் போலீஸ் ஸ்டேசன் சென்று கைது செய்யப்பட்டவன் எங்கே-அவனுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். முதலில் மறுக்கும் போலீஸ் அவருடன் வந்த கூட்டத்தைக் கண்டு பின்வாங்கி அடிபட்டவனை மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். மால்கம் போலீஸ் ஸ்டேசனிலிருந்து வெளியே வந்து அங்கிருந்தே மருத்துவமனைக்கு நடக்கத் தொடங்குகிறார். அவருடன் வந்த சிறிய கூட்டம் ஒன்றாக-பத்தாக-நூறாக பெருகுகிறது. ஏதோ ஒரு வசீகரத்தால் கட்டுண்ட மக்கள் கொஞ்ச கொஞ்சமாக அவர் பின்னால் அணி திரள்கின்றனர். கடைசியாக அவரது விரலசைவிற்க்கு அனைவரும் கட்டுப்படுகின்றனர். இந்நிகழ்ச்சி நேஷன் ஆப் இஸ்லாம் அமைப்பில் அவரது நிலையை உயர்த்துவதுடன் கருப்பின மக்கள் மத்தியிலும் பெரும் செல்வாக்கை சம்பாதித்து கொடுக்கிறது. அவரது செல்வாக்கு நாளுக்குநாள் உயர்கிறது. வெள்ளயர்களுக்கு எதிராக கடும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

மெக்கா பயணம்:
           அஹிம்சை பாதையை முற்றாக தவிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறார். சமகாலத்தவரும் அஹிம்சாவாதியான மார்டின் லூதர் கிங் ஜுனியரையும் பல கேள்விகளுக்கு உட்படுத்துகிறார். அதே சமயம் அவர் அமைப்பிலும் அவரது செல்வாக்கை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் அவருக்கு எதிராகத் திரும்புகின்றனர். ஆனாலும் மால்கம் எலைஜாவை முழுமையாக நம்புகிறார். இந்நிலையில் எலைஜாவிற்கு ஒரு பெண்ணுடன் தொடப்பு ஏற்பட்டு அதன் மூலம் ஒரு குழந்தையும் உண்டு என்பதை அறிந்து-தனக்கு ஒழுக்கத்தை போதித்தவர் இப்படியா என்பதை அறிந்து மிகுந்த மனவேதனையுடன் அந்த அமைப்பில் இருந்து விலகுகிறார். இருந்தாலும் அந்த அமைப்பைச்சேர்ந்தவர்களே அவரை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். பின் மெக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொள்கின்றார். அந்தப் பயணம் அவரது பார்வையில் மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. அனைத்து தரப்பு மக்களையும் அனுசரித்து போக வேண்டும்-அனைவருடனும் சேர்ந்தே கருப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபடவேண்டும் என்ற முடிவிற்கு வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டின் மீது கடும் தாக்குதல் நடக்கிறது.

மறுநாள் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கு செல்வது தான் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று தெரிந்தும் அக்கூட்டத்திற்கு செல்கிறார். அங்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே நேஷன் ஆப் இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்தவர்களால் சரமாரியாக சுடப்பட்டு இறக்கிறார். மார்டின் லூதர் கிங் ஜுனியர் வருத்தத்துடன் தன் அனுதாபத்தை பதிவு செய்கிறார்.அதன்பின் உண்மையான மால்கம் X பற்றி படங்களுடனும் கடைசியாக நெல்சன் மண்டேலா மால்கம் Xயைப் பற்றி விவரிப்பதுடனும் படம் முடிவடைகிறது.

மால்கம் Xல் உள்ள X எதைக் குறிக்கிறது?

அடிமைப்படுத்தப்பட்ட கருப்பின மக்களுக்கு அவர்களது எஜமானர்களே பெயர் வைக்கின்றனர். மால்கம் Xன் உண்மைப் பெயர் கூட மால்கம் லிட்டில் என்பதாகும். ஆனால் லிட்டில் என்ற பெயர் தன் குடும்பப் பெயர் அல்லவென்றும், அடிமையாய் கிடந்த தன் மூதாதையர்களின் எஜமானர் யாராவது வைத்த பெயராகயிருக்கும்-அதனால் X என்றால் கணிதத்தில் தெரியாத என்ற பொருள்-எனவே அதையே என் பெயருக்குப்பின்னால் சேர்க்கிறேன் என்கிறார்.


அவர் Extremistடா?
ஆம். அஹிம்சை வழியில் மட்டுமே போராடிக்கொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது என்பதில் உறுதியாய் இருந்தார். மார்டின் லூதர் கிங் ஜுனியரின் புகழ் பெற்ற பேச்சான I have a dreamற்கு எதிராக king may have a dream but we are experiencing only nightmares என்றார். ஆனால் பின்னாளில் அவர் சற்று மாறியதாகத் தெரிகிறது.


அவரைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாமல் நான் ஏதாவது சொல்வது சரியாக இருக்காது. அதனால் இந்தப்படம் எனக்கு ஏன் பிடித்தது என்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

                                                                   இந்தப்படத்தை அப்படியே இந்தியச் சூழலுக்கு பொருத்திப் பார்க்கலாம். இதுல அவர் கேக்குற பல கேள்விகள் நமக்கும் கட்டாயம் தோணும். இயேசு ஏன் எல்லா ஓவியங்களிலும் வெள்ளயராகவே காட்டப்படுகிறார்? யோசிச்சுப் பார்த்தா..நம்மவுருல பல தெய்வங்களின் ஓவியங்கள் வெள்ளை நிறத்திலேயே இருக்குது. இது ரவி வர்மா வகையறாக்கள் பண்ணி வச்சது. (பெண்களையும் வெள்ளை நிறத்திலேயே சித்தரிச்சிருப்பார்கள்). அதே போல் டிக்சனரியில் Black-White இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் பார்ப்பார். அதன் மூலம் எப்படி ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு கறுப்பின மக்களுக்கு எதிராக விஷம் பரப்பப்பட்டது என்பதை புரிந்து கொள்ளலாம். நம் நாட்டிலும் இந்த மாதிரி வேலை நடந்தது அனைவருக்கும் தெரிஞ்சதே. மேலும் படத்தின் வசனங்கள் அனைத்தும் முக்கியமானவைகள். பல இடத்தில் மால்கம் Xஇன் உண்மையான வார்த்தைகளையே பயன்படுத்தியிருக்கின்றனர். மார்டின் லூதர் கிங் ஜுனியருக்கும் அவருக்கும் இருந்த முரண்பாடுகளையும் காட்டியிருக்கின்றனர். (இதில் என்ன கொடுமை என்றால் அஹிம்சை வழியில் நடந்த மார்டின் லூதர் கிங் ஜுனியர், காந்தி இவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை)


                                                        சரி..இந்த மாதிரி Biopic படங்கள் ஏன் நம்ம நாட்டுல எடுக்கவே மாட்டேன்கிறாங்க? எனக்கு ஞாபகம் வரது ரெண்டே படம்-நேதாஜி(ஷ்யாம் பெனகல்) & அம்பேத்கர் (இந்த படம் எப்பதான் ரிலீஸ் ஆகுமோ?). காந்தி-அதையும் ஒரு வெள்ளக்காரன்தான் எடுக்க வேண்டியிருக்கு. சரி..பெரிய தலைவர்கள் வாழ்கைய மட்டுமில்லாமல் சாதாரண மக்களின் உண்மைக் கதைகளையாவது எடுக்குறாங்கன்னா அதுவுமில்ல. அப்படியே எடுத்தாலும் ரௌடி வகைகள் தான் வருது. பெரிய நடிகர்கள், டைரக்டர்கள்னு சொல்லிக்கிறவங்க ஒருத்தரும் இந்த மாதிரி ஒரு சின்ன முயற்சியையும் செய்யறதில்ல. புதுசா வர யாராவது செஞ்சா அதையும் ஆதரிக்கறதில்ல. இப்ப கூட நெல்லுன்னு ஒரு படம்-கீழ்வெண்மணி சம்பந்தமானது-சென்சார்ல பிரச்சனை. ஆனா இந்தப்படம் ஆரம்பிக்கறதே அமெரிக்க தேசியக்கொடியின் எரிப்போட தான். மேலும் டென்சல் வாஷிங்டன்-இதுவரை எத்தனை உண்மைக் கதைகளில் நடிச்சிருப்பார்..Hurricane, Malcom X, American Ganster இப்படி பல படங்கள சொல்லலாம். என்னய பொறுத்த வரையில் கற்பனையான ஒரு கதாபாத்திரத்தை திரையில் பிரதிபலிக்கிறதை விட உண்மையான கதாபாத்திரங்களை நடிக்கிறதே சிரமம்-திறமை என்பேன். இந்தப் படத்தின் டைரக்டர் ஸ்பைக் லீ (Inside Man, They Dont care about us-jackson video இது ரெண்டதான் நான் பார்த்திருக்கேன்) காலேஜிலயிருந்தே மால்கம் Xஇன் கதையை படமாக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டாராம். இவர் இதை படமாக்கிய விதத்தைப்பற்றி சில குறைபாடுகளை சொல்கின்றனர். ஆனா மால்கம் X பற்றி தெரியாதவர்கள் கூட இந்தப் படத்தைப் பார்த்தால் அவரது தாக்கத்தையும் கருப்பின மக்களின் வலியையும் கண்டிப்பாக உணரலாம். கடைசியாக எனக்கு மிகப் பிடித்த பாப் மார்லேய்யின் ஒரு மிகப் பிடித்த பாடலுடன் முடித்துக் கொள்கிறேன். தயவு செய்து இந்த பாடலை ஒரு முறை கேளுங்கள். கேட்டிருந்தால் மறுபடியும் கேட்பது தவறில்லையே.இந்த சூழ்நிலைக்கு மிகப் பொருத்தமான வரிகள்.என்ன ஒரு தீர்க்கமான வார்த்தைகள்...
Buffalo soldier, dreadlock rasta
There was a buffalo soldier in the heart of America
Stolen from Africa, brought to America
Fighting on arrival, fighting for survival

I mean it when I analyze the stench
To me it makes a lot of sense
How the dreadlock rasta was the buffalo soldier
And he was taken from Africa, brought to America
Fighting on arrival, fighting for survival

Said he was a buffalo soldier, dreadlock rasta
Buffalo soldier in the heart of America

If you know your history
Then you would know where you're coming from
Then you wouldn't have to ask me
Who the 'eck do I think I am                

I'm just a buffalo soldier in the heart of America
Stolen from Africa, brought to America
Said he was fighting on arrival, fighting for survival
Said he was a buffalo soldier, win the war for America

Dreadie, woy yoy yoy, woy yoy-yoy yoy
Woy yoy yoy yoy, yoy yoy-yoy yoy
 Buffalo soldier troddin' through the land, wo-ho-ooh
Said he wanna ran and then you wanna hand
Troddin' through the land, yea-hea, yea-ea

Said he was a buffalo soldier, win the war for America
Buffalo soldier, dreadlock rasta
Fighting on arrival, fighting for survival
Driven from the mainland to the heart of the Caribbean

Singing, woy yoy yoy, woy yoy-yoy yoy
Woy yoy yoy yoy, yoy yoy-yoy yoy

Troddin' through San Juan in the arms of America
Troddin' through Jamaica, a buffalo soldier
Fighting on arrival, fighting for survival
Buffalo soldier, dreadlock rasta


Facebookers..

42 comments :

  1. கொழந்த
    கலக்கல்,அற்புதம்,நல்ல படங்களின் அறிமுகத்தில் மீண்டும் ஒரு முத்து.நீங்கள் எங்கள் சொத்து.இருங்க ஒரு டென்சல் ஃபேனை இப்போவே இங்க அனுப்பறேன்,இந்த படம் பார்த்து தான் நான் டென்சல் பித்து பிடித்து அலைந்தேன்.மகா நடிகர் அவர்.

    ReplyDelete
  2. தலைவர் படத்தை பத்தி எழுதியிருக்கீங்க...காலையில வந்து விபரமாக பின்னூட்டம் போடுறேன் இப்போதைக்கு ;))

    ReplyDelete
  3. அருமையான விமர்சனம். கோர்வையாக கொடுத்து நம்மூரில் ஏன் இது போன்ற படங்கள் வருவதில்லை என்று கேட்டு முடித்திருப்பது பொருத்தம்.

    நிறைய எழுதுங்க!


    * பாப் மார்லியின் வரிகளுனூடான பாடலுக்கு சிறப்பு நன்றி. :)

    ReplyDelete
  4. டென்ஷில் ஒரு அற்புதமான நடிகர்.. நல்லா எழுதிருக்கீங்க கொயந்த.. உறுதியா பாக்கனும் இந்த் படத்த :)

    ReplyDelete
  5. நான் இந்தப்படம்பார்த்த கையோடு மால்கம் எக்ஸ் வாழ்க்கை வரலாறு[விடியல் வெளியீடு]படித்துவிட்டேன்.அமெரிக்க வெள்ளைபிசாசுகளைக்கண்டால் ஒரு அடியாவது கொடுக்க வேண்டும் என்று மனசு தீப்பிடித்து அலைந்தது.தங்கள் பதிவு மீண்டும் அதை ஞாபகப்படுத்திவிட்டது .நன்றி

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. சரவணன்,

    எங்கேயிருந்துதான் இந்த மாதிரிப் படங்களையெல்லாம் கண்டுபிடிக்கிறீங்களோ? மால்கம் எக்ஸ் குறித்து அதிகம் தெரியாது. நான் பார்க்கவேண்டிய படங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேபோகிறது!

    ReplyDelete
  8. @கீதப்ப்ரியன்
    டி ஆர் மாதிரி பின்றீங்கலே..BTW மிக்க நன்றி. உங்களதுல ஒரு டென்சல் படம் கூட இல்ல போலிருக்கு. சீக்கிரம் ஒண்ண தட்டி விடுங்க பாஸ்..

    @கோபிநாத்
    பார்த்து பதவிசா பின்னூட்டம் போடுங்க. சின்னப்பையன்

    @தெகா
    பாஸ்..ரொம்ப நன்றி. //நிறைய எழுதுங்க// சும்மாவே குசும்பெடுத்தவன். இப்படி உசுப்பேத்தி வேற விட்டுறீங்க.

    @இராமசாமி கண்ணண்
    தல...ஹா.பாலா பதிவுல போட்டு உங்களுக்கு இயல்பாவே கவிதை நடை வருது பாருங்க
    //நல்லா எழுதிருக்கீங்க கொயந்த
    உறுதியா பாக்கனும் இந்த படத்த//

    @உலக சினிமா ரசிகன்
    ணா..இவ்வளவு உணர்ச்சிவசப்படும் ஆளா நீங்க? வெள்ளக்காரன அடிக்கறதே விட நம்ம நாட்டுல பல பேர அடிக்கணும்கிறது என் கருத்து.
    என்ன சொன்னாலும்-இந்த மாதிரி படங்களை அங்க வெளியிட அனுமதிக்கிறாங்க பாருங்க..அத நம்மூருல நெனச்சு கூட பார்க்க முடியல (முதல்ல படம் எடுத்தாதான)

    @சு.மோகன்
    நண்பா.நீங்கள் திரைப்படத்தை பார்த்தாலும் உ.சி.ரசிகர் சொன்ன விடியல் பதிப்பகத்தின் புத்தகத்தையும் படிச்சா இன்னும் நல்லா இருக்கும்.

    ReplyDelete
  9. கொழந்த, விமர்சனம் அருமை. இன்று டி.வி யை திறந்தாலே சிகப்பாக மாறச்சொல்லி விளம்பரங்கள் சிகப்புதான் அழகு என்று குழந்தைகளின் மனதில் விஷ விதையை விதைத்துக்கொண்டிருக்கின்றன.எங்கள் வீட்டு குழந்தை கருப்பு என்று வேறொரு குழந்தையை ஒதுக்கும் பொது அதிர்ந்துவிட்டேன்.

    ReplyDelete
  10. நான் பொதுவா ஆன்லைன்ல படம் பார்ப்பேன். லிங்க் கிடைச்சிடுச்சு பார்க்கிறேன். http://www.letmewatchthis.com/watch-2524-Malcolm-X

    நீங்க சொன்ன மாதிரி தலைவர்கள் வாழ்க்கை சம்பந்த படங்கள் நிறைய வரணும். அப்பத்தான் அவர்களை பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ள முடியும். சினிமா இல்லாட்டி வ.ஊ.சி, கட்டபொம்மன், மருது பாண்டியர் பத்தி நமக்கு தெரியுமா?

    இந்த மாதிரி நல்ல படங்களை அறிமுகப்படுத்தும் உங்களுக்கு இனிய வாழ்க்கை அமையும்.

    ReplyDelete
  11. நானும் டென்சலின் ரசிகன் தான். இனிமேல் உங்கள் எழுத்துக்கும்.

    ReplyDelete
  12. தமிழ்மணம் ஓட்டுப்பட்டையைக் காணவில்லையே நண்பா.

    ReplyDelete
  13. குழந்தை,
    பகத்சிங்கின் ,வாழ்க்கை வரலாறு பற்றிய படமும்,காந்தி பற்றிய ஹிந்தி படமும் உள்ளது,ராஜாராம் மோகன்ராய் பற்றிய படம் ஒன்றுகூட இல்லை.வேதனை,அவர்தான் உடன்கட்டை ஏறுவதையும்,விதவைகள் காலனி உருவாவதையும் தடுத்தவர்.பாரதி,பெரியாருக்கெல்லாம் முன்னோடி.அவருக்கே படமில்லை..

    ====
    தவிர சுபாஷ் நாஜி ஜெர்மனியில்,அதுவும் இனப்படுகொலை மிகத்தீவிரமாக செயல்படுத்தப்பட்ட மூன்று வருடம் [1942 - 1945]ராஜமரியாதையுடன் தங்கியிருந்தார்.

    உள்ளூர் ஆட்களுக்கே ஆயிரத்தெட்டு கெடுபிடி,ஐடி கேட்கப்பட்ட அக்காலத்தில் இவர் எப்படி அங்கே சொகுசாக இருந்தார்?.

    2ஆம் உலகப்போரில் போலந்து,ஜெர்மனியின் இனவதை முகாம்களை விடுவிக்க வந்த ப்ரிடிஷாருடன் சேர்ந்து போராடி வந்த இந்தியர்களை பிடித்து Indische Legion என்றும் ஆரம்பித்துள்ளார்.அப்படி சுபாஷ் மூலம் மட்டும் நமக்கு சுதந்திரம் கிடைத்திருந்தால் ,இந்தியரான நம்மையும் f***ing nazi என்றே அழைத்திருப்பார்கள், நான்கிங்கில் 20லட்சம் பேரை கொன்று குவித்த ஜப்பானிய மன்னன் ஹிரோஹிட்டோ வின் சிநேகமும் இவருக்கு நிரம்ப உண்டு.nanking massacre படமும் men behind sun படமும் பாருங்கள் நண்பா,ஆகவே நான் காந்திஜிக்கே நன்றி கூறுகிறேன்.

    ReplyDelete
  14. @மைதீன்
    நன்றி. உங்க குழந்தையை வழிப்படுத்த தான் நீங்க இருக்கீங்களே. இது மாதிரி பழக்கத்த என்கரேஜ் பண்ற ஆட்களே நான் பார்த்திருக்கேன்

    @எஸ்.கே
    ணா..ஆன்-லைனில் பார்க்கிறதை விட டவுன்லோட் செஞ்சு சப்-டைட்டிளோட பார்த்தா தான் நல்லா புரிசுக்க முடியும்னு நினைக்கிறேன்

    @செ.சரவணக்குமார்
    ஒரு எழுத்தாளரே என் எழுத்தை ரசிக்கிறார..சரியா போச்சு..
    (ணா..தமிழ் மனம் பட்டை டிசைன் எனக்கு பிடிக்கல. இன்ட்லி வந்து ப்ளூ கலர்ல சன்னமா இருக்கா..அதான் வெச்சுருக்கேன்)

    ReplyDelete
  15. @கீதப்ப்ரியன்
    பகத்சிங் பத்தி ஒரே சமயத்தில அஜய் தேவ்கன், பாபி தியோல் நடிச்சு வந்துச்சே அதான இல்ல வேறய? காந்தி-ஷ்யாம பெனகல் எடுத்தாரே அதா?
    -----
    பாஸ்..ரெண்டாம் உலகப்போர் 1939ல் ஆரம்பிச்சு ரெண்டு வருசங்கழிச்சு பிரிட்டிஷ் சரிக்கிட்டு இருந்தப்ப நம்ம அவுங்களுக்கு ஆதரவு தர்றதா இல்ல சுதந்திரத்திற்காக கடும் போராட்டத்தில் இறங்குவதான்னு பயங்கர குழப்பமான சூழ்நிலையில் காந்தி Moral-Ethical அப்படின்னு சொல்லி அதை வேண்டாம் என்று முடிவெடுத்தது எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். மேலும் போஸ் காந்தியின் சீதராமையாவை எதிர்த்து நின்று ஜெயித்தது-அதை காந்தி தன்னுடைய சொந்த தோல்வி என்று சொன்னது-அந்த எலெக்சன்ல போஸ் ஆதரவா முத்துராமலிங்க தேவர் பெரும் ஓட்டு வேட்டைல இறங்கியது இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.

    போஸ்க்கு எப்படியாவது பிரிட்டிஷ்காரர்களை நாட்ட விட்டு விரட்டனும். அவ்வளவுதான். அதற்காகத்தான் அவர் ஜெர்மனிக்கு போனாரே தவிர அவுங்க நடவடிகைகளை ஆதரித்தார்னு அர்த்தமில்லயே. 1941-1943 வரை ஹிட்லரின் உச்ச நாட்கள். அப்ப ஜெர்மனியில நடந்த விசயங்கள் 100க்கு 5 தான் வெளியவே வந்திருக்கும். அவரு ஜெர்மனில 1941-1943பாதி வரைதான் இருந்திருக்கார். அப்பறமா சிங்கப்பூர் போயி அங்கதான் INAவ ஜப்பான் உதவியுடன் உருவாக்கினார்.அவர் ஜெர்மனில இருந்த வரைக்கும் நாஜி நடவடிக்கைகளை பார்த்து அதிர்ந்ததா தான் நான் படிச்சுருக்கேன். nankingபத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது. இந்த லிங்க பார்த்தா கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம். http://www.revolutionarydemocracy.org/rdv7n1/Bose.htm

    எனக்கு காந்திதான் பிடிக்கும், நேதாஜி தான் பிடிக்கும் அப்படின்னு கிடையாது. ஒவ்வொருத்தர்கிட்டயிருந்து ஒவ்வொண்ண எடுத்துக்குவேன். காந்திட கூட எனக்கு ஒரு சில பிடிக்காத விஷயங்கள் உண்டு. ஆனா அவரது நோக்கத்தை நான் எப்போதும் கொச்சைப்படுத்தியதில்லை. நான் அஹிம்சையதான் ரொம்ப நம்புறவன்(இருந்தாலும் எனக்கு காங்கிரஸ் பிடிக்காது).

    பி.கு: யாராவது நேதாஜி பத்தி தெளிவுபடுத்த முடிஞ்சா மகிழ்ச்சி

    ReplyDelete
  16. குழ்ந்தை நீங்க சொன்னவை ,புதிதாக படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தவிர ,நான் படித்ததை நம்பிவிடமாட்டேன்,மேலும் தேடுவேன்.இல்லாட்டி மாற்றான் மனிபுகுந்த மாமா நேருவை,மனிதருள் மாணிக்கம் என்று பாடபுத்தகத்தில் படித்தது போல ஏமாந்து தான் போகணும்.

    நீங்கள் சொன்ன அந்த ஆண்டுகளில் வதைமுகாம்கள் பற்றி வெளியே தெரிய துவங்கியாகிவிட்டது,நீங்கள் ஆமென் என்னும் ஆஸ்ட்ரிய படம்,பார்க்கவேண்டும்,அதில் யூத இனவதையின் மீதான் போப்பின் மௌனம் பெருமளவில் அலசப்பட்டு இருக்கும்.

    மேலும் சோஃபீஸ் சாய்ஸ் என்னும் ஜெர்மானிய படமும் பார்க்கனும்,அதில் நாஜிக்கு எதிராய் ஜெர்மானிய மாணவர்கள் கிளர்ந்து எழுந்ததை அருமையாய் காட்டியிருப்பார்கள்.

    எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அந்த நான்கிங் மசாக்ரே பாருங்கள்,பின்னர் மென் பிஹைண்ட் த சன்,பின்னர் உக்கார்ந்து யோசியுங்கள்.:))

    எனக்கு கருமம் பிடித்த காங்கிரஸ் பிடிக்காது.நான் சிலாகிப்பது அஹிம்சையை மட்டுமே.

    போரில் எதிர்ப்படும் சிறுமிகள்,பெண்களை வன்புணர்ந்து யோனியில் ஈட்டி சொருகும் கொடூரமான மனிதரை அல்ல.

    ReplyDelete
  17. தலைவா..//ஆனா அவரது நோக்கத்தை நான் எப்போதும் கொச்சைப்படுத்தியதில்லை. நான் அஹிம்சையதான் ரொம்ப நம்புறவன்(இருந்தாலும் எனக்கு காங்கிரஸ் பிடிக்காது//
    இதான் நான் சொல்ல வந்தது.நீங்க சொல்லிருக்கறது நேதாஜி பத்திய விசயத்திலிருந்து deviate ஆனா மாதிரி எனக்கு தோணுது-அல்லது-புரியல.

    நேதாஜி இத ஆதரிச்சாரா? இல்ல கண்டுக்காம விட்டாரா?
    எப்படி சொந்த நாட்டில் அடக்குமுறைக்கு உட்பட்ட ஒருத்தர் அடுத்த நாட்டில அதை ஆதரிக்க முடியும்?
    சினிமாவில் காண்பிப்பதை மட்டும் வைத்து எப்படி ஒரு மனிதரை எடை போட முடியும்?
    அந்தப் படங்களில் அவர் நேரடியாக குறிப்பிடப்படுகிறாரா?

    இதுதான் எனக்கு தோன்றிய கேள்விகள். மத்தபடி ஜப்பான்-ஜெர்மனி புரிஞ்ச போர்குற்றங்கள் அனைவருக்கும் தெரிஞ்ச ஒன்றுதான. அதை நான் மறைக்கிற தொனியில எங்கேயும் எழுதலையே?

    ReplyDelete
  18. ஏனுங்க குழந்த,நான் என்ன சொன்னேன்னே புரிஞிக்கலயா?நீங்க?
    நான் கூடா நட்பு வச்சிக்கிட்டதயே தப்புன்னு சொல்லுறேன்,நீங்க,ஆதரிச்சாரான்னு கேக்கறீங்களே?!!!

    ====
    சின்ன எக்சாம்பிள்?:-
    உள்ளூர்ல எல்லாரையும் புடிக்காம,வெளியூர்காரனுக்கு தான் வீடு வாடகைக்கு வுடுவேன்னு நீங்க ஒரு பீகார் பீரோ புல்லிங் ஃபேமிலிக்கு வீட்டை தெரிஞ்சே வாடகைக்கு விடுவீங்களா?

    இது தான் என் கேள்வி,சோஃபீஸ் சாய்ஸ் படத்துல ஜெர்மானியர்களே ஹிடலரை எதிர்த்து புரட்சி செய்ய அரம்பித்து ஜில்லட்டினுக்கும் தலையை கொடுத்தனர்.ஏன் கொல்லப்படும் அப்பாவி ஜனங்களுக்காக,

    எப்படியாவது சுதந்திரம் வாங்கலாம்னா,ஒரு குடும்பத்தின் குடுகுடுகிழ்வன் முதல் நேற்று பிறந்த பச்சைகுழந்தைவரை ஒட்டுமொத்தமாய் கருவறுக்கும் நாஜியுடன்,ஜப்பானியனுடன் கூட்டு வைப்பீர்களா?

    மேலே சொன்ன படங்களில் எங்குமே சுபாஷ்,கூட்டு வைத்தார் என்றோ அவர் பெயரோ வரலைங்க.கொழந்த.நீங்க மறைச்சு எழுதுநீங்கன்னு சொன்னேனா?
    கூடா நட்பு தவறு என்று தான் சொன்னேன்.

    மற்றபடி எனக்கு இதை மேலும் தொடர விருப்பமில்லை கொழந்த.

    ReplyDelete
  19. சூப்பர் மக்கா...நீர் ப்ளாக் வெச்சிருக்குறது இப்பதான் தெரியும்.

    ReplyDelete
  20. //சூப்பர் மக்கா...நீர் ப்ளாக் வெச்சிருக்குறது இப்பதான் தெரியும். //

    ஊர்ல என்ன நடக்குதுன்னே தெரிஞ்சிக்காத மக்கா.

    ReplyDelete
  21. கொழந்த
    மயில் தஞ்சாவூர் காரருங்க,நல்ல நண்பர்.செம குசும்புகாரர்.

    ReplyDelete
  22. @|கீதப்ப்ரியன்..
    தல..நான் நேதாஜி இதெல்லாம் செஞ்ச்சாரா இல்லையா அந்த விசயத்துகே ஆரம்பம் முதலே போகல.. அவர மாதிரி பல ஆட்கள வேணும்னே ஒதுக்கி வெச்சுருந்தாங்கன்னுதான் சொல்ல வந்தேன். மத்தபடி நான் ஒரு bad communicator. தோணுறது ஒண்ணு இருக்கும் அத சொல்லைல செரிய சொல்ல தெரியாது. அதுல இதும் ஒண்ணு. நான் சொல்ல நினைச்சத செரியா வெளிப்படுத்த தெரியல. உங்கள மடக்கனும்னு நெனச்சு சில கேள்விகள கேட்டதா தயவு செய்து நினைக்காதீங்க..நெஜமா தெரிஞ்சுக்க தான் கேட்டேன்

    ReplyDelete
  23. @மரா
    இத்தனனாள் எப்படி தெரியாம போச்சு..(எவ்வளோ விளம்பரம் செஞ்சிருப்பேன்)

    ReplyDelete
  24. அட கொழந்த,
    என்ன நீங்க வெளியாள்கிட்ட பேசுறா மாதிரி பேசிக்கிட்டு.
    மயில் கொஞ்சம் நாளா பிஸி,ஏற்கனவே சொல்லிருந்தேன்,இபோ தான் வர்ரார்,இனி தொடர்ந்து வருவார்.

    ReplyDelete
  25. பாஸ்..அவரித நக்கலுக்கு சொன்னேன். உங்களுக்கு பதில் போட்டிருக்கேனே அது ஓகே தான. நான் வந்து தாஜா பண்றேன்லாம் நினைக்காதீங்க (நீங்க அப்படி நினைக்கக்கூடிய ஆளிலைன்னு தெரியும். see bad communication). வேணும்னே விதண்டாவாதம் பண்ணேன்னு நினைக்காதீங்க. எனக்கு இது புது விஷயம். இதேது நல்லா தெரிஞ்ச விசயமா இருந்தா-அப்ப கூட வாதம் பண்ணுவேனே தவிர வெட்டியா வெறுப்பேத்த மாட்டேன்.

    ReplyDelete
  26. ஹும்... மூணு கமெண்ட்ல ஒரு சண்டை முடிஞ்சி போச்சா????

    நாரதா... நீ இன்னும் நிறைய வொர்க் அவுட் பண்ணனும்டா..!!!

    ReplyDelete
  27. மால்கம் எக்ஸ் பத்தி நிறைய படிச்சிருக்கேன். ஆனா இன்னமும் மால்கம் எக்ஸ் படம் பார்க்காததுக்கு காரணம், ஒரு காலத்துல எனக்கு டென்ஸல சுத்தமா புடிக்காது. எனக்கு அப்ப ரொம்ப புடிச்சவங்க பட்டியல்ல மார்கன் ஃப்ரீமேன், சாமுவேல் ஜாக்ஸன், விங் ரேம்ஸ் மற்றும் டெல்ராய் லிண்டோ மட்டுமே ;-)... அப்புறமா தான் டென்ஸல் படங்களைப் பார்க்க ஆரம்பிச்சேன் ;-).. அப்புடியே இந்தப் படம் மிஸ்ஸாயிருச்சி ;-)... டிவிடி கிடைச்சா பாக்கறேன் ..

    ரிவ்யூ வாஸ் வெரி குட் ! பின்னுங்க !! ;-)

    மேலே கீதப்ரியன் போட்ட ‘மீ த ஃபர்ஸ்ட் ‘ கமெண்ட்டை அப்படியே வழிமொழிகிறேன் ;-)

    ReplyDelete
  28. அப்ப்றம், இந்த பஃபெலோ ஸோல்ஜர் பாட்டைத்தானே நம்ம தேவா சுட்டு, ‘அகிலா அகிலா’ பாட்டு போட்டாரு நேருக்கு நேர் படத்துல ;-)

    ReplyDelete
  29. @ஹாலிவுட் பாலா
    தல..நானும் பி.ப எப்பதான் ஆகிறது. இப்படி ஏதாவது பெரிசாகும்னு நெனச்சா புசுக்குனு முடிஞ்சிருச்சு. கவலையேபடாதிங்க..அடுத்த ஒரு பதிவு-ஹாலிவுட் பாலாவின் அமெரிக்க மோகம் இந்திய பகிஷ்கரிப்பு அப்படின்னு ஒண்ண தட்டி விடுறேன். சூப்பரா பத்திக்கும்ல (உங்களுக்குத்தான் >400 followers இருக்காங்களே)

    ReplyDelete
  30. @கருந்தேள் கண்ணாயிரம்
    //பெலோ ஸோல்ஜர் பாட்டைத்தானே நம்ம தேவா// ணா..அத மட்டுமா சுட்டாறு, எல்லா நல்ல அற்புதமான மார்லேயின் பாடல்களையும் கெடுத்து குட்டிச்சுவராக்குனாறு.

    அவசியம் இந்தப் படத்த பாருங்க. அப்பறம் நான் முதல்முதலா அகுர் படத்த பத்தி எழுதைல
    யாரோ இன்னும் ரெண்டு வாரத்தில டிவிடி கிடைச்சுரும் அப்படின்னு சொன்ன ஞாபகம்

    ReplyDelete
  31. நக்கல் பார்ட்டிகள் எல்லோருமே ஒரு முடிவோடத்தான் இருக்கிறீங்க போலிருக்கு.

    கார்த்தி இப்படித்தான் கோனார் நோட்ஸ் போல கொடுத்து என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டுருந்தார். இப்ப நீங்க.

    ஆனா எஸ்கே கொடுத்துருக்காரு பாருங்க லிங்க் இத அப்படியே நூல் பிடித்துப் போய் இனிமே தான் படமே பார்க்க கத்துக்கணும். அப்புறம் தான் உங்கள மாதிரி விமர்சனப் பார்வையில் பார்க்க முடியும்.

    தமிழ்மண பட்டை

    பாலா எல்லோரையுமே கெடுத்து தொலைந்து விட்டார் போலும்.

    ReplyDelete
  32. பீடித்தவர்கள்

    ரொம் பீடித்தது.

    ReplyDelete
  33. @ஜோதிஜி
    ணா..profileல நம்ம தலைவர் படமா..ரொம்ப சந்தோஷம்.
    //அப்படியே நூல் பிடித்துப் போய் இனிமே தான் படமே பார்க்க கத்துக்கணும். அப்புறம் தான் உங்கள மாதிரி விமர்சனப் பார்வையில் பார்க்க முடியும்// கிழிஞ்சது. எனக்கு உள்ள பார்வையே கோளாறுன்னு தான் கண்ணாடி போட்டிருக்கேன். இதுல இது வேறயா..
    (தனிப்பட்ட முறைல என்ன கேட்டா சினிமா ரசிகனா பார்த்த போதும் என்பேன்)

    ReplyDelete
  34. கிழிஞ்சது. எனக்கு உள்ள பார்வையே கோளாறுன்னு தான் கண்ணாடி போட்டிருக்கேன். இதுல இது வேறயா..

    ஒரு தல பாலாவின் லொள்ளு தாங்க முடியாத தவிச்ச எனக்கு இன்னோரு குட்டி தல கிடைச்சாச்சு..........

    ReplyDelete
  35. ஏக் கி சாந்த் ஹை
    ஏக் கி சூரஜ் ஹை
    ஏக் கி பாஷா ஹை
    ஏக் கி பாலா ஹை
    (எனக்கு ஹிந்தி தெரிஞ்சு இத எழுதுனேன் நெனச்ச சந்தோஷம்.
    இல்ல இது பாஷா பாட்டுன்னு தெரிஞ்சு போச்சுனா ஹி.ஹி.)

    ReplyDelete
  36. ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதாத்தா

    ReplyDelete
  37. @கருந்தேள் கண்ணாயிரம்
    ஆப் எஹான் ஆனே பர் பகோத் சுக்ரியா..கியா ஆப்கா ப்ளாக் பர் குச் ஹோத்த ஹை?

    (இவ்விடம் ஹிந்தி சகாய விலையில் ஆன்-லைனில் கற்றுத்தரப்படும். மேற்கொண்டு தகவல் அறிய டயல் செய்யுங்கள்- ஏக் சூன்ய சூன்ய ஏக் சூன்ய சார் தீன் )

    ReplyDelete
  38. இந்த படம் இன்னும் நான் பார்க்கலை....நல்லா எழுதி இருக்கிங்க.. பார்ப்போம்..

    ReplyDelete
  39. @ஜாக்கி சேகர்
    உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். அவசியம் பாருங்க. நன்றி

    ReplyDelete
  40. * 2009:Srikanth stars in the film Mahatma which is directed by Krishna Vamsi. [1]
    * 2009: Road to Sangam directed by Amit Rai and starring Om Puri, Pavan Malhotra, and Masood Akhtar [2][3]
    * 2007: Gandhi is portrayed by Darshan Jariwala in Gandhi, My Father.
    * 2007: The image of Gandhi is reprised by Dilip Prabhavalkar in Shankar Dada Zindabad, the Telugu language remake of Lage Raho Munna Bhai.
    * 2006: The image of Gandhi is portrayed by Dilip Prabhavalkar in the award-winning film Lage Raho Munna Bhai. It stars Sanjay Dutt as Munna Bhai and popularised the new term Gandhigiri in India.
    * 2005: Gandhi is portrayed by Mohan Jhangiani (actor) and Zul Vilani (voice) who appears briefly in the film Water (the film was also turned into the book, Water: A Novel, by Bapsi Sidhwa).
    * 2005: Mangal Pandey: The Rising, ends with newsreel footage featuring Gandhi.

    * 2005: Maine Gandhi Ko Nahin Mara, tells the story of a retired Hindi professor, who, as he falls victim to dementia, begins to believe that he was accused of being the man who assassinated Mahatma Gandhi.
    * 2004: Swades, "epitomizes Gandhi's values" according to his great-grandson, Tushar Gandhi.[3] The protagonist is called Mohan(Bhargava) which is Gandhi's birth name(Mohandas). The film is about a young NRI returning to India to help the country and its people, a tale similar to that of Gandhi's life.

    * 2001: Gandhi is portrayed by Surendra Rajan in the film Veer Savarkar, about the life of Vinayak Damodar Savarkar.

    * 2000: Gandhi is portrayed by Mohan Gokhale in Dr. Babasaheb Ambedkar, which is based upon the life of B. R. Ambedkar.

    * 2000: Gandhi is portrayed by Naseeruddin Shah in Hey Ram. A film made by Kamal Haasan, it portrays a would-be assassin of Gandhi and the dilemma faced by the would-be assassins in the turmoil of post-partition India.

    * 1998: Gandhi is portrayed by Sam Dastor in Jinnah, a biopic of the founder of Pakistan, Mohammed Ali Jinnah.

    * 1996: Gandhi is portrayed by Rajit Kapur in his award-winning role as a young Gandhi in The Making of the Mahatma, a Shyam Benegal film about Gandhi's 21 years in South Africa.

    * 1993: Gandhi is portrayed by Annu Kapoor in the Ketan Mehta film Sardar which is about the life of Sardar Vallabhbhai Patel.

    * 1986: Gandi is portrayed by Sam Dastor in Lord Mountbatten: The Last Viceroy , a British mini-series which is about Louis Mountbatten and his role in the partitioning of India and Pakistan. [4]

    * 1982: Gandhi is portrayed by Ben Kingsley in the award-winning film, Gandhi, directed by Richard Attenborough. The film won eight Academy Awards, including Best Picture and Best Actor.

    * 1968: Mahatma: Life of Gandhi, 1869–1948 (documentary on the life of Gandhi)

    * 1963: Gandhi is portrayed by J.S. Casshyap in Nine Hours to Rama based upon the 1962 book by Stanley Wolpert.
    ===
    http://en.wikipedia.org/wiki/List_of_artistic_depictions_of_Mohandas_Karamchand_Gandhi

    ReplyDelete
  41. இந்த படத்தை அறிமுகபடுத்தியதற்கு நன்றி கொழந்த :) படிப்பதற்கு சுவாரஸ்யமா இருந்துது :)

    ரொம்ப நாளா பாக்கணும்-னு நினச்சிட்டு இருக்கேன்..

    அதே மாதிரி stagevu.com-ஐ அறிமுக படுத்தியதற்கு நன்றி.. :) டொரண்டில் கிடைக்காத பல படங்கள் அங்கு கிடைக்கிறது :)

    ReplyDelete