Saturday, September 25, 2010

The Great Dictator - பகடியின் உச்சம்

                                    Reporter: Mr.Lenin whom do you want to meet ?
                                        Lenin: Chaplin is the only man in the world I want to meet.

----------------------------------

                        1939 - இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்கிறது. 1940ல் ஹிட்லர் அதிகார வெறியின் உச்சத்தில் இருந்த நேரம். போலந்து,டென்மார்க்,பெல்ஜியம்,நோர்வே,நெதர்லாந்து,பிரான்ஸ் என்று அத்தனை நாடுகளையும் ஜெர்மானியப் படைகள் அடுத்தடுத்து கைப்பற்றியது. யாருமே ஹிட்லரை கேள்விகேட்க முடியாத நிலை - அவனை எதிர்ப்பதை நினைத்தே பார்க்க முடியாது.அது ஜெர்மனியாக இருந்தாலும் சரி..பிற நாடுகளாக இருந்தாலும் சரி. இந்தத் சூழ்நிலையில் 1940ல் ஹிட்லரை படுகேவலமாக சித்தரித்து - நாடகமோ, கதையோ அல்ல - ஒரு முழுநீளத் திரைப்படமே வெளிவந்தது.The Great Dictator. சாப்ளின் -அப்போது அமெரிக்காவில் இருந்ததால் தைரியமாக இப்படத்தை எடுத்ததாகக் கருதலாம். ஆனால் இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் எந்தப் பக்கமும் சேராமல் அமெரிக்கா அடக்கியே வாசித்தது(Pearl Harbour தாக்குதலுக்கு பிறகே வெறியுடன் களத்தில் இறங்கியது). அதனால் சாப்ளின் இப்படத்தை எடுத்த போது அமெரிக்காவில் - எதுக்கு தேவையில்லாம இந்த ஆளு ஹிட்லர் வம்புக்கு போறார் - என்று முணுமுணுப்புகளும் எழுந்தது. 


மேலும் பெருமளவில் கடன் இருந்த சூழ்நிலையிலேயே இந்தப் படத்தை தயாரித்து இயக்கவும் செய்தார். அதுவரையில் மௌனப் படங்களை மட்டுமே எடுத்து வந்தவர், முதல் முறையாக பேசும் படத்தை எடுக்கிறார் - அதுவும் இதைப் போன்ற ஒரு கருவுடன். படத்தின் கதை..வழக்கமான ஆள்மாறாட்டக் கதை. ஒரு சாப்ளின்-நாவிதர்,யூதர். ஜெர்மனிக்காக போரில் ஈடுபட்டு அம்னிசியாவிற்கு ஆளாகி மருத்துவமனையில் இருக்கிறார். மற்றொரு சாப்ளின் - அடினாய்டு ஹென்கல். டோமானியா நாட்டின் சர்வாதிகாரி. யூதர்களை பல விதங்களில் கொடுமைப்படுத்தியும், சொந்த நாட்டு மக்களைப் பற்றி எவ்வித கவலையின்றி சர்வாதிகாரம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி செய்து வருகிறான். அவனுக்கு உடந்தை அமைச்சர் கார்பேஜ். ஒருகட்டத்தில் சர்வாதிகாரிக்குப் பதில் நாவிதர் ஆட்சிக்கு வர என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை. யாரையும் விட்டுவைக்காமல் சகலரையும் பயங்கரமாக கேலி செய்திருப்பார். ஹிட்லர்(ஹென்கல்), கோயபல்ஸ்(கார்பேஜ்), ஜெர்மனி(டோமானியா - டோமைன், விஷத்தின் பெயர்), முசோலினி(நபலோனி), இத்தாலி(பாக்டீரியா-ஏன் என்று உங்களுக்கே புரிந்திருக்கும்) என்று ஒருவர் பாக்கியில்லை. ஹென்கல் வரும் அணைத்து காட்சிகளும் அட்டகாசம். சிரித்துக் கொண்டே இருப்பேன்(எத்தனை முறை பார்த்தாலும்). நகைச்சுவை பிரதானமாக இருந்தாலும் யூதர்களின் நிலையையும், ஜெர்மானிய வீரர்களின்-மக்களின் நிலையையும் அப்பட்டமாக காட்டியிருப்பார்.    


                                                   மேலும் குறிப்பிடத்தக்க விஷயம்-முதல்முறையாக பேசும் படம் எடுத்தாலும் என்ன ஒரு குரலிசைவு,உடல் மொழி. Downfall படம் பார்த்த அனைவருக்கும் ஹிட்லரின் உடலசைவு நன்றாக புரிந்திருக்கும். ஆனால் 1940லேயே அந்த உடல்மொழியை தத்ரூபமாக திரையில் எப்படிக் கொண்டுவர முடிந்ததோ.ஹிட்லரின் கொடுமைகள் அவ்வளவாக வெளியே தெரியாத போது இந்தப் படம் உலகளவில் அதை எடுத்துரைத்தது. ஆனாலும் ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பிறகு முழுஉண்மைகளும் வெளியே தெரிந்த பொழுது, சாப்ளின்-இந்தக் கொடுமையான விஷயங்கள் முழு அளவில் எனக்கு முன்னமே தெரிந்திருந்தால் இந்தப் படத்தை எடுக்கும் மனோதிடம் இருந்திருக்குமா என்பது சந்தேகமே என்று பின்னர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். "தமிழ் படம்" போன்ற படங்களை எடுப்பதே தைரியமான முயற்சி என்று சொல்லும் ஊரில் வாழும் எனக்கு , 1940லேயே ஒரு சர்வாதிகாரியை எதிர்த்து எடுக்கப்பட்ட இப்படத்தை என்ன சொல்ல என்றுத் தெரியவில்லை... 


எனக்கு மிகப்பிடித்த ஆளுமைகளில் ஒருவர்-சார்லி சாப்ளின். நானும் ஆரம்பத்தில் அவரை ஒரு நகைச்சுவை நடிகர் என்ற அளவிலேயே தெரிந்து வைத்திருந்தேன். போகப்போக அவரது படங்களைப் பார்த்ததும், அவரைப் பற்றி படித்ததும் அந்த நினைப்பை அடியோடு மாற்றியது. குறிப்பாக இந்தப் படம் அவரது திறமையின் உச்சம் என்று தோன்றுகிறது. முதல்முறையாக பேசும் படத்தை இயக்குகிறார். அதுவும் எத்தகைய கதைக்கரு பாருங்கள்...(பேசும் படங்கள் பெருமளவில் வர ஆரம்பித்த காலத்திலேயே மௌனப் படங்களையே ரொம்ப விரும்பினார். ஆனாலும் இப்படத்திற்காக அந்த முடிவை தளர்த்திக்கொண்டார்.)அவர் நடிகர்-தயாரிப்பாளர்-இயக்குனர் மட்டுமின்றி இப்படத்தின் இசையமைப்பிலும் பல புதுமைகளை புகுத்தியுள்ளார்(உ.தா-சலூனில் முடிவெட்டுவதேர்கேற்ப சிம்போனி இசை ஓடும் காட்சி). பின்னாளில் சிறந்த இசையமைப்பாளராகவும் பரிமளித்தார். அது மட்டுமின்றி இன்னொரு மிகப்பெரிய விஷயம் அவர் நடித்த அணைத்துப் படங்களின் தயாரிப்பாளர்-கதாசிரியர்-நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் எல்லாம் அவரே. விளையாட்டிலும் வல்லவர். இதையெல்லாம் தாண்டி சிறந்த சிந்தனாவாதியும் கூட. சொந்த வாழ்க்கையில பல கஷ்டங்களை சந்தித்தாலும் அவை எதுவும் தன் படங்களில் பிரதிபலிக்காதவாறு பார்த்துக் கொண்டார். தன்னை வருத்தி பிறரை மகிழ்விக்கும் கலையின் பிதாமகன் அவர். அவரது சுயசரிதையை படித்துப் பார்க்க வேண்டும்(நானும் கூட). குழந்தைகள்-சிறுவர்களுக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சாப்ளின் படங்களை தாராளமாக கொடுக்கலாம்(எனக்கு இதுவரை யாரும் கொடுத்ததில்லை).இந்தப் படத்தின் கடைசி காட்சியில் ஹென்கலுக்கு பதிலாக ஆட்சியில் இருக்கும் நாவிதர் சாப்ளின் பேசும் இந்த வசனங்களே போதும்-சாப்ளினின் ஆளுமையை வெளிப்படுத்த.அது ஒரு அற்புதமான பேச்சு. தயவுசெய்து அதைப் பாருங்கள்.


பி.கு: 
  • நேற்று இந்தப் படத்தை UTV Worldmoviesல் பார்த்தேன். முதல்தடவ பார்ப்பத போல விழுந்து விழுந்து சிரிச்சேன். அதுனால ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை என்னய மாதிரி சின்னப் பசங்களை எல்லாம் கூப்பிட்டு வெச்சுகிட்டு இந்தப் படத்தப் பாருங்க (பெரும்பாலானவங்க பார்த்திருப்பீங்க,மறுபடியும் பாருங்க). கண்டிப்பா நீங்களும் நல்லா ரசிப்பீங்க.
  • ஹிட்லரே இந்தப் படத்தைப் பார்க்க விரும்பியதாக எங்கேயோ படித்த ஞாபகம்
இணைப்பு:
பின்னூட்டத்தில் சில விஷயங்களை இணைத்து உள்ளேன். அதே இங்கேயும் பகிர்ந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன்.
----------*********----------
ஹிட்லரே இந்தப் படத்தைப் பார்க்க விரும்பியதாக எங்கேயோ படித்த ஞாபகம் இருக்குதுன்னு சொன்னேனே..அது சம்பந்தமாக நெட்டில் பதிவெழுதி முடித்தவுடன் தேடியபோது இவைகள் கிடைத்தன

1) http://www.dailymail.co.uk/news/article-520648/Nazi-propaganda-book-reveals-Charlie-Chaplin-Hitlers-death-list.html
http://www.telegraph.co.uk/news/uknews/1579971/Nazi-propaganda-book-targeted-Charlie-Chaplin.html

இந்த இரண்டு லிங்க்-ல் ஹிட்லரின் படுகொலைப் பட்டியலில் சாப்ளின் ஏற்கனவே இருந்ததாகவும் (1930) இந்தப் புத்தகமே சாப்ளினை மேலும் கிளறி விட்டதாகவும் ஒரு தகவல். அப்படினா தெரிஞ்சே எவ்வளவு தைரியத்துடன் எடுத்திருக்கார் பாருங்க.

2) எஸ்.ரா அவர்களும் சாப்ளினை பற்றி எழுதியுள்ளவை: http://www.sramakrishnan.com/deep_story.asp?id=66&page=6

இந்த லிங்க்-ல் அக்னிப்பார்வை என்ற பதிவர் சிறப்பாக சாப்ளினின் படங்களை குறித்து எழுதியுள்ளார்.     http://www.thamizhstudio.com/serials_2_index.php.


3) ஹிட்லருடன் சேர்த்து நிறைய பேர் சாப்ளின்-ஒரு யூதர் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் இது குறித்து சாப்ளின் ஒரு பேட்டியில்-எனக்கு அந்த கொடுப்பினை இல்லை என்று கூறியுள்ளார்.

-----*******-----
இப்ப முக்கியமான கேள்வி - ஹிட்லர் இந்தப் படத்த பார்த்தானா?

http://www.bbc.co.uk/bbcfour/documentaries/features/tramp-and-the-dictator.shtml

இந்த லிங்க் bbc சாப்ளின் பத்தி எடுத்த ஒரு documentaryல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
//But did Hitler ever see it? Screenwriter Budd Schulberg, who was present at the Nuremberg trials, noticed that the title was mentioned twice in a list of films that had been sent to Hitler; moreover, an eyewitness who was a member of Hitler's inner circle at the time is absolutely convinced that he did see it//

அதேபோல் IMDB triviaவிழும் http://www.imdb.com/title/tt0032553/trivia
//When this film was released, Adolf Hitler banned it in Germany and in all countries occupied by the Nazis. Curiosity eventually got the best of him and he had a print brought in through Portugal. He screened it not once but twice. Unfortunately, history did not record his reaction to the film. When told of this, Charles Chaplin said, "I'd give anything to know what he thought of it."//

மேலும் சில வலைத்தளங்களிலும் இது போன்ற செய்தியுள்ளது. அதைப் போன்றே ஹிட்லர் தனது மீசையை சாப்ளினை பார்த்து சற்று திருத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இருவரது பிறந்த நாட்களும் இடையே 4 நாட்கள் மட்டுமே இடைவெளி. சிறுவயதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஒரே மாதிரி முக அமைப்பு. இது போன்ற ஒற்றுமைகளும் உள்ளன.
Facebookers..

29 comments :

  1. //ஹிட்லரேயே இந்தப் படத்தைப் பார்க்க விரும்பியதாக எங்கேயோ படித்த ஞாபகம்//
    நிஜமாவேயா??

    ReplyDelete
  2. சார்லி சாப்ளின் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரை நான் தன்னம்பிக்கையின் அடையாளமாக காண்கிறேன். அவருக்கு காலின் genu valgum/knock knee எனும் பிரச்சினை இருந்தது. இதனால் முட்டிகள் ஒட்டியும், பாதங்கள் அகன்றும் இருக்கும் இதனால் நடப்பதில் பிரச்சினை ஏற்படும். சாப்ளின் அதையே தன் தனித்துவமான திறனாக மாற்றினார். பிரிந்து போன பெற்றோர்கள், ஏழ்மை குடும்பம் என பிரச்சினைகள் இருந்தாலும் அதிலிருந்து மீண்டும் உலகம் புகழும் கலைஞனாக உயர்ந்தார். இப்படம் அவரின் தைரியத்திற்கு ஒரு உதாரணம்.

    இப்படம் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். தாங்கள் சொன்னபடி ஹிட்லர் இதை பார்க்க விரும்பியதாக நானும் படித்துள்ளேன். இப்படத்தை இதுவரை முழுமையாக பார்த்ததில்லை. ஆனால் நிச்சயம் பார்ப்பேன்.

    தொலைக்காட்சியில் அவ்வப்போது இவரின் ஊமைப்படங்களை போடுவார்கள். விரும்பி பார்ப்பேன்!

    ReplyDelete
  3. @JZ
    நண்பா..என் பின்னூட்டங்கள் அது சம்பந்தமாக பதில் அளிக்கும் என்று நம்புகிறேன்.
    (நீங்க JayZ ரசிகரா? அதுனால இந்தப் பெயரா?)

    @எஸ்.கே.
    நண்பா..நீங்க சொன்னவைகள முன்னமே படித்திருக்கிறேன். இனி வரும் பின்னூட்டங்கள கவனிங்க

    ReplyDelete
  4. *********Very Important********

    ஹிட்லரே இந்தப் படத்தைப் பார்க்க விரும்பியதாக எங்கேயோ படித்த ஞாபகம் இருக்குதுன்னு சொன்னேனே..அது சம்பந்தமாக நெட்டில் பதிவெழுதி முடித்தவுடன் தேடியபோது இவைகள் கிடைத்தன

    1) http://www.dailymail.co.uk/news/article-520648/Nazi-propaganda-book-reveals-Charlie-Chaplin-Hitlers-death-list.html

    http://www.telegraph.co.uk/news/uknews/1579971/Nazi-propaganda-book-targeted-Charlie-Chaplin.html

    இந்த லிங்க்-ல் ஹிட்லரின் படுகொலைப் பட்டியலில் சாப்ளின் ஏற்கனவே இருந்ததாகவும் (1930) இந்தப் புத்தகமே சாப்ளினை மேலும் கிளறி விட்டதாகவும் ஒரு தகவல். அப்படினா தெரிஞ்சே எவ்வளவு தைரியத்துடன் எடுத்திருக்கார் பாருங்க.


    2) எஸ்.ரா அவர்களும் சாப்ளினை பற்றி எழுதியுள்ளவை: http://www.sramakrishnan.com/deep_story.asp?id=66&page=6

    இந்த லிங்க்-ல் அக்னிப்பார்வை என்ற பதிவர் சிறப்பாக சாப்ளினின் படங்களை குறித்து எழுதியுள்ளார்.
    http://www.thamizhstudio.com/serials_2_index.php.
    அதில் அவர் ஹிட்லர் இரண்டு முறை கிரேட் டிக்டேடர் படத்தை பார்த்துள்ளதாக கூறுகிறார்.

    3) ஹிட்லருடன் சேர்த்து நிறைய பேர் சாப்ளின்-ஒரு யூதர் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் இது குறித்து சாப்ளின் ஒரு பேட்டியில்-எனக்கு அந்த கொடுப்பினை இல்லை என்று கூறியுள்ளார்.

    ReplyDelete
  5. *********Very Important********
    இப்ப முக்கியமான கேள்வி - ஹிட்லர் இந்தப் படத்த பார்த்தானா?

    http://www.bbc.co.uk/bbcfour/documentaries/features/tramp-and-the-dictator.shtml

    இந்த லிங்க் bbc சாப்ளின் பத்தி எடுத்த ஒரு documentaryல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

    //But did Hitler ever see it? Screenwriter Budd Schulberg, who was present at the Nuremberg trials, noticed that the title was mentioned twice in a list of films that had been sent to Hitler; moreover, an eyewitness who was a member of Hitler's inner circle at the time is absolutely convinced that he did see it//

    அதேபோல் IMDB triviaவிழும்
    http://www.imdb.com/title/tt0032553/trivia

    //When this film was released, Adolf Hitler banned it in Germany and in all countries occupied by the Nazis. Curiosity eventually got the best of him and he had a print brought in through Portugal. He screened it not once but twice. Unfortunately, history did not record his reaction to the film. When told of this, Charles Chaplin said, "I'd give anything to know what he thought of it."//
    இந்த செய்தி சொல்லப்பட்டுள்ளது

    மேலும் சில வலைத்தளங்களிலும் இது போன்ற செய்தியுள்ளது. அதைப் போன்றே ஹிட்லர் தனது மீசை சாப்ளினை பார்த்து சற்று திருத்தியதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் இருவரது பிறந்த நாட்களும் இடையே 4 நாட்கள் மட்டுமே இடைவெளி. சிறுவயதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஒரே மாதிரி முக அமைப்பு. இது போன்ற ஒற்றுமைகளும் உள்ளன.

    (இந்தத் தகவல்களை பதிவிளும் இணைத்து விடுகிறேன் )

    ReplyDelete
  6. கொழந்த , நல்ல பதிவும் ஆதாரா சுட்டிகளும்,இந்த படம் வைத்திருக்கிறேன்,ஆனால் பார்க்கவில்லை,கொழந்த,ஹிட்லருக்கே ஒரு தலைவலின்னா அது இதுதான் போல,அது தான் தில் பட பாட்டில் கூட ஹிட்லர் காலத்தில் சார்லிசாப்ளின் தில் என்று ஒரு வரி வரும்.

    ReplyDelete
  7. "தமிழ் படம்" போன்ற படங்களை எடுப்பதே தைரியமான முயற்சி என்று சொல்லும் ஊரில் வாழும் எனக்கு ,

    அருமையான கட்டுரை

    ReplyDelete
  8. //அவர் நடித்த அணைத்துப் படங்களின் தயாரிப்பாளர்-கதாசிரியர்-நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் எல்லாம் அவரே.//

    ப்பூ... இதென்ன பிரமாதம்... எங்க தலைவர் விஜய டிஆர் படமெல்லாம் பார்த்ததில்லையா நீங்க? அவரு , அவரோட படங்கள்ல ஹீரோயின் வேஷம் போடாததுதான் பாக்கி... ;-) மத்ததெல்லாம் அவரே செய்வாரு...

    ஃபாரின் மோகத்தில் இந்தியன் சாதனையாளர்களை அடையாளம் கண்டு கொள்ள மறுக்கும் கொழந்தை, விஜய டிஆர் படங்கள் அத்தனைக்கும் விமர்சனம் எழுத வேண்டும் என்றூ தீர்ப்பளிக்கிறேன் ;-)

    ReplyDelete
  9. மத்தபடி, சார்லி சாப்ளின் ஃபெஸ்டிவல், கோவைல ஒவ்வொரு வருஷமும் நடக்கும்.. என்னோட சிறு வயசுல.. செண்ட்ரல் தியேட்டர்ல தான்.. ஒரு வாரம் முழுவதும், சாப்ளினோட அத்தனை படங்களையும் வரிசையா போடுவாங்க.. எங்கப்பா என்னை அப்போ தவறாமல் அழைச்சிகினு போவாரு.. அப்புடி நான் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் பார்த்த சாப்ளின் படம் - சிடி லைட்ஸ். அப்பவே அது என்னை கவர்ந்துச்சி..

    என்னோட சிறு வயதில் என்னை ஆங்கிலப்படங்கள் மற்றும் காமிக்ஸ்களுக்கு அறிமுகப்படுத்திய தந்தையை நினைவு கூர்கிறேன் (தல இன்னும் கோவைல தான் இருக்கு.. ) :-)

    ReplyDelete
  10. @கீதப்ப்ரியன்
    ணா..அந்த லிங்க்-ல போய் பார்த்தீங்களா? நானும் இப்பதான் இந்த விசயங்கள முழுமையா தெரிஞ்சுகிட்டேன்.
    //ஹிட்லர் காலத்தில் சார்லிசாப்ளின் தில் என்று ஒரு வரி வரும்// முடியல.....

    ReplyDelete
  11. @denim
    பாஸ்..கமெண்டுக்கு நன்றி. ஆமா..denim ? என்ன அர்த்தம்ன்னு தெரிஞ்சுக்கலாமா?

    ReplyDelete
  12. @கருந்தேள் கண்ணாயிரம்
    //எங்க தலைவர் விஜய டிஆர் படமெல்லாம் பார்த்ததில்லையா நீங்க? அவரு , அவரோட படங்கள்ல ஹீரோயின் வேஷம் போடாததுதான் பாக்கி//

    உடன்பிறப்பு கருந்தேள் அவர்களுக்கு கடுமையான கண்டனங்கள். என்ன விமர்சகர் நீங்கள்? சரியாக படத்தை கவனிக்க மாட்டீர்களா?

    வீராசாமி படத்திலேயே எங்கள் தங்கம் தன்மான சிங்கம் விஜய டிஆர் ஹீரோயின் வேஷத்தையும் போட்டு விட்டார். பாடல் காட்சிகளை மறுபடியும் பார்த்தால் அந்த உண்மை புலப்படும்.
    (நிஜமாகவே எனக்கு விஜய் மாதிரி ஆட்களை விட டி.ஆர், ரித்தீஷ் இவுங்கள ரொம்பப்பிடிக்கும்)

    ReplyDelete
  13. @@கருந்தேள் கண்ணாயிரம்
    //எங்கப்பா என்னை அப்போ தவறாமல் அழைச்சிகினு போவாரு.அப்புடி நான் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் பார்த்த சாப்ளின் படம் - சிடி லைட்ஸ். அப்பவே அது என்னை கவர்ந்துச்சி//
    தல..எப்படி நாப்பது வருஷத்திற்கு முன்னாடி நடந்தவைகள ஞாபகம் வெச்சிருக்கீங்க....பின்றீங்க...

    //என்னோட சிறு வயதில் என்னை ஆங்கிலப்படங்கள் மற்றும் காமிக்ஸ்களுக்கு அறிமுகப்படுத்திய தந்தையை நினைவு கூர்கிறேன்//
    நா இப்ப வரை பார்த்த 99% படங்கள் எங்க அப்பா கூடத்தான். அவர்தான் அம்புலிமாமா, முத்து - லயன் காமிக்ஸ் ஆரம்பிச்சு என்ன லைப்ரரிக்கும் கூட்டிகிட்டு போனார்.

    ஒருவேளை அப்பா உங்களுக்கு அறிமுகப்படுத்திய மாதிரி நீங்களும் உங்கள் blog மூலம் அதயே செய்யரீங்களோ...

    ReplyDelete
  14. சரவணன்,

    நீண்ட நாட்களாகிவிட்டன இந்தப் படத்தைப் பார்த்து. பேசும் சித்திரம் என்ற காரணத்திற்காகவே, இதைப் பார்ப்பதைத் தவிர்த்து வந்திருக்கிறேன்.

    இதைக் காட்டிலும், மனிதனின் மென்மையான உணர்வுகளைச் சொல்லுவதால் 'City Lights', ‘The Kid, 'The Circus' போன்ற படங்களே எனக்குப் பிடித்தவை.

    ReplyDelete
  15. நண்பரே,

    சாப்ளின் மகத்தான கலைஞன். அவர் படங்களில் இழையோடியிருக்கும் மனித நேயம் நகைச்சுவையைவிட மனதை தொட்டுவிடும். அவர் படங்களில் எனக்கு பிடித்தது City Lights மற்றும் The Kid.

    ReplyDelete
  16. @சு.மோகன்
    நண்பா..என்னைப் பொறுத்தவரை City Lights,The Kid,The Circus(இந்தப் படங்களும் மிக மிகப் பிடிக்கும்) படங்களை விட இந்தப் படத்தை எடுக்க மிகச் சிரமம் என்று தோன்றுகிறது. என் பதிவிலேயே அதைப் பற்றி கூறியுள்ளேன்.

    பாஸ்..சத்தமில்லாம புதுத் தளத்தை தொடங்கீட்டீங்க. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. @கனவுகளின் காதலன்
    //அவர் படங்களில் இழையோடியிருக்கும் மனித நேயம் நகைச்சுவையைவிட மனதை தொட்டுவிடும்//

    சத்தியமான வார்த்தைகள். நீங்கள் சொன்ன படங்கள் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். நண்பர் மோகனிடம் சொன்ன வார்த்தைகளை உங்களிடமும் சொன்னவைகளாக எடுத்தக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  18. பார்த்தேன் கொழந்த,படமும் இன்னிக்கு பார்ப்பேன்,நானும் சிறு வயதில் மாப்பிள்ளை விநாயகரில் சார்லி சாப்ளின் படங்களான சிட்டி லைட்ஸும்,தெ கிடும் பார்த்துள்ளேன்,என் மாமா இட்டுனு போனார்.சென்னை வந்ததும் டெல்லி ஒளிபரப்பில் அடிக்கடி இந்த படங்களை ஷார்டாக ஒளிபரப்புவர்.அப்பொது கூட இந்த படத்தை போட்டதில்லை கபோதிகள்

    ReplyDelete
  19. சாப்ளினுக்கு காந்திமீது ஈடுபாடு உண்டு என்று சிறுவர் மலரில் படித்துள்ளேன்,அவர் 2முறை முயன்றும் தோற்றுவிட்டாராம்,அது பற்றி தெரியுமா?

    ReplyDelete
  20. சிறுவர் மலர் என்பதால் உங்களுக்கு தெரிந்திருக்கும் கொழந்த

    ReplyDelete
  21. http://www.bbc.co.uk/radio4/history/making_history/makhist10_prog1a.shtml

    இதோ அது சம்பந்தமான இன்னொரு சுட்டி

    ReplyDelete
  22. @கீதப்ப்ரியன்
    ணா..சாப்ளினின் வாழ்க்கை வரலாற்றை படிச்சீருக்கீங்களா..

    //சிறுவர் மலர் என்பதால்// அது சிறுவர் மலர் ஆச்சே. குழந்தைகள் மலரா இருந்தா எனக்கு தெரிஞ்சிரிக்கும்

    ReplyDelete
  23. நேற்றுதான் பார்த்தேன்.. எத்தனை படங்களில் இந்த பட காட்சிகளின் தழுவல்கள் இருக்கிறது?
    Chaplin is indeed a great..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  24. //Chaplin is indeed a great//
    அப்படியே வழிமொழிகிறேன்..நன்றி நண்பா..

    ReplyDelete
  25. சார்லி சாப்ளின் படம் என்றாலே நினைவுக்கு வருவது the Circus தான்.... விழுந்து விழுந்து சிரித்த ஞாபகம்....அப்புறம் டிடி யில் முன்பு காலையில் ஒளிபரப்பும் காட்சிகள் மறக்கமுடியாது.

    பிரபலங்களை, பிரபல படங்களையும் கிண்டல் செய்து எடுக்கப்படும் (spoof movies) எடுப்பதற்கே தைரியம் வேண்டும், அதும் Hitler போன்றவர்களை கிண்டல் செய்து படம் எடுப்பது அசாதரணம். அந்தப்படத்தை பார்த்து Hiter the Rascal என்ன நினைச்சிருப்பான்....? my curiosity also blasting....me too ready to give anything to ascertain what was his openion about the movie...:))

    ReplyDelete
  26. மிகவும் அற்புதமான படம். சார்லி சாப்ளின் நடிப்பு மிக அருமை.
    சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க.
    http://dohatalkies.blogspot.com/2012/07/12-angry-men.html

    ReplyDelete
  27. @doha..

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  28. super post but none of this links are working ! :(

    ReplyDelete