An artist never works under ideal conditions. If they existed, his work wouldn`t exist, for the artist doesn`t live in a vacuum. Some sort of pressure must exist. The artist exists because the world is not perfect. Art would be useless if the world were perfect...
எல்லோருக்கும் தெரிந்ததுதான் - உலகம் முழுவதுமே ரெண்டே ரெண்டு வகையான படங்கள் மட்டுமே உள்ளன. வணிக ரீதியானது.மற்றொன்று சினிமாவை கலையாக பாவித்து எடுக்கப்படுவது.இதில் ரெண்டாவது வகை படங்களின் டைரக்டர்களிடம் கேட்க கூடாத சில கேள்விகள் உள்ளன.ஒரு கவிஞரிடம் போய் நீங்க ஏன் கவிதை எழுதறீங்கனு கேட்பது எவ்வளோ அபத்தமோ அதுபோல டர்கோவ்ஸ்கி போன்ற ஆட்களிடம் நீங்க ஏன் சினிமா எடுக்குறீங்கனு கேட்பதும்...
அந்திரே ருபெலோவ் (15வது நூற்றாண்டு) என்பவர் ரஷ்யாவின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவராக கருதப்படுபவர். Icons என்று அறியப்படும் ஏசு,மரியாள்,தேவதைகள் போன்றோர்களை வரைவதில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். அதுவரை இருந்த ஓவியங்கள் அனைத்தும் காலண்டர் ஓவியங்களைப் போல் இருக்க..இவரே குறியீட்டுத்தன்மையை ஓவியங்களில் புகுத்தியுள்ளார். ஆனால் இந்த மாற்றத்தை அவரால் உடனடியாக செயல்படுத்த முடிந்ததா,அவரிருந்த உலகம் அவரையும் அவரின் ஓவியங்களையும் எவ்வாறு பாதித்தது என்பதே இந்தப் படத்தின் கதை..

படம் முன்னுரை - ஏழு பகுதிகள் - முடிவுரை என்ற அளவில் நகர்கிறது. உண்மையிலேயே நகர்கிறது. இதில் முன்னுரை படத்திற்கு துளியும் சம்பந்தமில்லாமல் ஒரு குறியீடாகவே சொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. 1400ஆம் ஆண்டில் ஒரு தேவாலயத்தில் இருந்த ருபெலோவ் + கிரில்+டானியேல் மூவரும்,பாதிரியார்கள் -வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணாம்சம். அங்கிருந்து தொடங்கும் ருபெலோவின் வாழ்கையை ஏழு பகுதிகளாக இப்படம் சித்தரிக்கிறது. தியோபோனஸ் என்ற அக்காலகட்டத்தின் மற்றொரு சிறந்த ஓவியர் ருபெலோவிற்கு அழைப்பு விடுக்க அது கிரில் & டானியேலிடம் பொறாமையை தூண்டி விடுகிறது. தியோபோனஸிடம் ருபெலோவ் பணியாற்றும் போது அவரின் கண்களின் வழியாகவே வெளியுலகத்தையும் ஓவியங்களையும் காண வேண்டிய கட்டாயத்திற்கு ருபெலோவ் ஆளாகிறான். ஓவியங்கள்-கடவுள்-மதம்-மக்கள் குறித்து ருபெலோவ் தியோபோனஸிடம் பலமுறை விவாதங்களில் ஈடுபடுகிறான். இந்த காலகட்டத்தில் ரஷ்யாவில் பெரும் குழப்பம் இருந்தது. மங்கோல்-துருக்கியர்கள் ஆக்கிரமிப்பு, சொந்த மன்னனின் கொடுங்கோள் ஆட்சி இதுபோக பெரும் வறட்சி என மிகுந்த கொந்தளிப்பான நேரம். துருக்கியர்கள் பெரும் படையுடன் ருபெலோவ் ஓவிய வேளையில் ஈடுபட்டிருக்கும் தேவாலயத்தின் மீது கொடும் தாக்குதல் நடத்துகின்றனர். மக்களையும் பாதிரிகளையும் ஏன் கால்நடைகளை கூட விட்டுவைக்காமல் வெறித்தனமானா தாக்குதல் தொடுக்கின்றனர். இதைக் கண்ட அதிர்ச்சியில் ருபெலோவ் ஓவியம் வரைவதை விட்டுவிடுவதோடு மட்டுமல்லாமல் ஆழ்ந்த மௌனத்திற்கு செல்கிறார்.1408 - 1424 வரை யாருடனும் ஒருவார்த்தை கூட பேசாமல் ஓவியமும் வரையாமல் காலத்தை கழிக்கிறார். அவர் மீது பொறாமை கொண்டு மடாலயத்தை விட்டு ஓடிய கிரில் திரும்ப வந்து அவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் வரைய நிர்பந்திக்கும் பொழுது கூட பேசாமல் இருக்கும் ருபெலோவ் கடைசியாக ஒரு சந்தர்ப்பத்தில் வாய் திறக்கிறார். "We will go to the Trinity monastery together. You’ll cast bells. I’ll paint icons". யாரிடம் இதைக் கூறுகிறார்? 16 ஆண்டுகால மௌனத்தை கலைக்கும் அளவிற்கு அவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது யார்..எது என்பதே கடைசி பகுதியின் கதை..முடிவுரையாக அதுகாறும் கருப்பு-வெள்ளையில் காண்பிக்கப்பட்ᮟ படம்,சட்டென வண்ணங்களின் ஊடே ருபெலோவின் ஓவியங்களை பகுதிகளாக காண்பிப்பதுடன் முடிவடைகிறது..
இந்தப் படத்தை பற்றி நான் உலகின் சிறந்த ஒளிப்பதிவுகளில் ஒன்று என்ற வரையில் தெரிந்து வைத்திருந்தேன். அது முற்றிலும் உண்மை. ஆரம்பத்தில் வரும் பலூனின் பறக்கும் காட்சிகளாகட்டும், ஓடும் சுனைநீரில் கலக்கும் வண்ணங்களின் கலவையாகட்டும்,கொடுமையான தாக்குதல் காட்சிகளாகட்டும், பரந்து விரிந்த ரஷ்யாவின் நிலப்பரப்பாகட்டும் ஒவ்வொன்றும் நாம் பார்வையாளர்கள் என்பதை மறக்கச் செய்து ஒரு கதாபாத்திரமாகவே நம்மை மாற்றி விடுகிறது. இதற்கு close-up காட்சிகள் மிகக்குறைவாகவே இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் ஒருமுறை கூட ருபெலோவ் வரைந்த ஓவியங்களின் முழு பரிமாணத்தையும் டர்கோவ்ஸ்கி காண்பிக்கவேயில்லை. அதுவே ஓவியங்கள் குறித்து ஒரு புதிர்த்தன்மையை அதிகப்படுத்துவதாக எனக்குத் தோன்றுகிறது.
இந்தப் படத்தை தர்கோவ்ஸ்கி 1966ல் எடுத்து விட்டிருந்தாலும் கூட 1971ல் தான் ரஷ்யாவில் வெளியீட முடிந்துள்ளது. படத்தில் மதங்கள் குறித்தும்,ரஷ்யாவின் ஆட்சியமைப்பை குறித்தும் சர்ச்சைக்கிடமான கருத்துக்கள் இருக்கிறது என்று ரஷ்ய அரசாங்கம் நினைத்ததால் இந்த நிலைமை. இந்த படம் கூற வரும் கருத்தும் அதுவே.சுதந்திரம் இல்லாத,கட்டுப்பாடுகள் நிறைந்த,மனிதத்தன்மையற்ற கலைகள் குறித்து கருத்துக்களே இப்படம்.
படம் முழுவதும் பல வித குறியீடுகள்..குதிரை,நீர்,ஒற்றை மரம் ஏன் ஓவியங்களில் கூட விரவிக்கிடக்கிறது குறியீடு.
தத்துவம்-வாழ்வியல் போன்றவைகளில் ஈடுபாடு இருப்பவர்கள், சினிமாவும் கலையின் நீட்சியே என்று நம்பும் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். பார்க்கும் ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு தாக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும்.சில பேருக்கு மொன்னைத்தனமாக தோன்றும்,சிலருக்கு படைப்பின் உச்சமாக தோன்றும்,சிலருக்கு தத்துவத்தின் கலவையாக தோன்றும்.பார்த்துவிட்டு சொல்லுங்கள். என்னளவில் நான் உணர்ந்தவைகள் 10% கூடயிருக்காது. அதேபோல் சொல்லாமல் விட்டவைகளும் ஏராளம். ஆனால் இந்தப் படம் என்னுள் படுஆழமான தாக்கங்களை உண்டு பண்ணியிருக்கிறது.சரியாக அதனை வெளிப்படுத்தும் பக்குவம் கைகூடவில்லை என்று நினைக்கிறன்.நிச்சயமாக ஒருநாள் மீண்டும் இந்த படத்தைப் பற்றி ஒரு பதிவு எழுத விருப்பம். பார்ப்போம்.
பி.கு:
- இந்தப் படத்தை நான் மதுரை புத்தகக் கண்காட்சியில் பாஸ்கரன் அவர்களின் கடையில் வாங்கியது. Director notes-views உட்பட பல விஷயங்கள் அந்த டிவிடியில் இருந்தது பல விதங்களில் உதவியது.
- ருபெலோவ் குறித்தும் அவரது சில புகழ் பெற்ற ஓவியங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இங்கே கிளிக்கவும்.
நண்பரே,
ReplyDeleteருபலொவ் எனும் ஓவியர் குறித்தும், டர்கோவ்ஸ்கி எனும் அபத்தமான கேள்வி கேட்க கூடாத ஒரு இயக்குனர் குறித்தும் உங்கள் பதிவின் வழி அறிந்துகொள்ள முடிந்தது மகிழ்ச்சியே. பதிவின் ஆரம்ப வரிகள் அசத்துகின்றன.
Art would be useless if the world were perfect.
ReplyDeleteஅருமையான வரிகள்!
புது அறிமுகம்! நன்றி!
கலக்குறே கொழந்த!!!
ReplyDelete//ஒரு கவிஞரிடம் போய் நீங்க ஏன் கவிதை எழுதறீங்கனு கேட்பது எவ்வளோ அபத்தமோ//
இப்பவாவது புரிஞ்சுதா? இனிமேல் கேள்வி வந்துதுதானா மிர்தாதைப் பத்தி பதிவு போட்டு பயமுறுத்துவேன்.
Anyway, நான் இலக்கியவாதி அல்லது தத்துவவாதி அல்லது எது முடியுமோ அதுவாக ஆகும் முயற்சியில் இருப்பதால், இந்தப் பதிவிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்.
யதேட்சையா இந்தப் படத்தோட ஒரு Scene பார்க்கும் வாய்ப்பு கிடச்சுது. அவரு பலூன்ல பறக்கமுயலும் scene அது. சரி ரொம்ப நல்லா இருக்கும்போலன்னு Pending-ல வெச்சுருக்கேன்
உங்கள் விமர்சனம் மிக அருமை, ஆனால் நானெல்லாம் "மானாட மயிலாட" பார்க்கிற ரகம்,
ReplyDeleteஇந்த படம் பார்த்தா என் மரமண்டைக்கு புரியுமோ என்னமோ?
@கனவுகளின் காதலன்
ReplyDeleteநன்றி தல..
உங்கள மாதிரி ஆட்களின் பதிவை படிச்சுதான் நா தமிழ் வார்த்தை பிரயோகத்திற்கு முக்கியத்துவம் தரத் தொடங்கியுள்ளேன்...
@எஸ்.கே
பாஸ்..படம் பாருங்க..அமைதியான சூழ்நிலையில் இருக்கும் போது பாருங்க..பார்த்திட்டு சொல்லுங்க..
போற்காட்டார் said...
ReplyDeleteஅந்தி மழை பொழிகிறது பாட்ட நிறைய தடவ பார்த்திருக்கேன்... இதை வெச்சிகிட்டு இந்தப் படத்தை பார்க்க முடியுமா?
//போற்காட்டார் said...
ReplyDeleteஅந்தி மழை பொழிகிறது பாட்ட நிறைய தடவ பார்த்திருக்கேன்... இதை வெச்சிகிட்டு இந்தப் படத்தை பார்க்க முடியுமா?// ம் பார்க்கலாம். ஆனா அதுக்கு முன்னாடி கரண்டு இருக்கான்னு பார்த்துகுங்க!
@சு.மோகன்
ReplyDelete//இப்பவாவது புரிஞ்சுதா? இனிமேல் கேள்வி வந்துதுதானா//
ணா..நான் கவிஞர்கள் குறித்து தான சொன்னேன்..நீங்க ஏன் உணர்ச்சிவசப்படுறீங்க..ஹி.ஹி....
டென்ஷன் ஆயிராதீங்க....உண்மையிலேயே இந்த Breathtaking cinematographyனு சொல்லுவாங்களே..அது இதான் போல...அதைப் போய் பெண்டிங்ல வச்சுட்டீங்களே...ஆயிரம் கவிதை,நூறு புனைவுகளின் தாக்கம் இந்தப் படத்தில் இருக்கும்....
@மொக்கராசா
//ஆனால் நானெல்லாம் "மானாட மயிலாட" பார்க்கிற ரகம்//
இந்த sarcastic பேச்செல்லாம் வேண்டாம்..நீங்களாவது மரமண்டை..நா அதுலயும் வாழமரத்து மரமண்டை...நெருப்பு வைக்கணும்னா உங்க இது கப்புனு பத்திக்கும்..எனக்கு அதுக்கே ஒரு மாமாங்கம் ஆகும். எனக்கே புரியும் போது உங்களுக்கு புரியாதா...ஆர்வம் இருந்தா சரி...
@கருந்தேள் கண்ணாயிரம்
ReplyDeleteசரி தான்...சுவத்தில எரிஞ்ச பந்து திரும்புது...
//இதை வெச்சிகிட்டு //
எங்க அடகு கடையிலையா...ஓ..அந்த காச வெச்சு படம் பார்க்கலாமே
@வீராசாமி
ReplyDeleteஉங்க எழுத்தும் நடையும் அப்படியே கருந்தேள் போலவே இருக்கிறது...
கருந்தேள் அவர்களே..இது நீங்க இல்லைனா உங்க ஸ்டைலில் யாரோ inspire ஆயிருக்காங்க
அடுத்த வாட்டி கோவை போகும்போது நம்ம டர்க்கோவ்ஸ்கி படமா அள்ளப்போறேன் ... பாஸ்கரன் உஷார் :-)
ReplyDeleteபதிவு ரொம்ப நல்லா இருந்திச்சி.. ஆழமான கட்டுரை.. மெத்த மகிழ்ச்சி :-)
ஆருய்யா அது வீராசாமி?
//பதிவு ரொம்ப நல்லா இருந்திச்சி.. ஆழமான கட்டுரை.. மெத்த மகிழ்ச்சி :-)//
ReplyDeleteஇவுங்க எப்பயுமே இப்படித்தான்..குத்துங்க எசமான்..குத்துங்க
//1408 - 1424 வரை யாருடனும் ஒருவார்த்தை கூட பேசாமல் ஓவியமும் வரையாமல் காலத்தை கழிக்கிறார்//
ReplyDeleteஇது ரொம்ப நல்லா இருக்கே?
//தத்துவம்-வாழ்வியல் போன்றவைகளில் ஈடுபாடு இருப்பவர்கள், சினிமாவும் கலையின் நீட்சியே என்று நம்பும் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்//
ரைட்டு, Weekend பார்த்துர வேண்டியதுதான்....
@வீராசாமி
ReplyDeleteநான் மதுரை பகுதி என்பதால் ஸ்டாலின் ஆதரவாளர்களான கூறுகெட்டாருக்கும் குறைமுருகனுக்கும் இங்கு இடமில்லை.
அண்ணன் பழகிரி வாழ்க...
@சு.மோகன்
இப்படித்தான் பல படத்த சொன்னிங்க..ஒண்ணையும் பார்த்ததா தெரியலயே....
படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்துவிட்டது தங்களின் இந்தப் பதிவு அருமை . பகிர்வுக்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்
ReplyDelete@கொழந்த
ReplyDeleteபரவாயீல்லையே..... இடைவெளி விட்டு பதிவு போட்டாலும் நல்ல பதிவா போட்டு இருக்கீங்க.........நான் கண்டிப்பா பார்க்கிறேன்(Horror மட்டும்தான் பார்ப்பேன்னு கிடையாது,இது மாதிரி படங்களும் நமக்கு புடிக்கும்)
கொழந்த இருக்கியா..........
ReplyDeleteகுழந்தாய்..தார்க்காவ்ஸ்கி உலகசினிமாவின் உச்சம்.ஒரே தடவையில் அவரது படத்தை பார்த்து புரிந்து கொள்வது என்பது என் போன்ற பாமரனுக்கு கடினம்.பசோலினி,புனுவல்,பெர்க்மன் பார்த்து அறிவை பெருக்கி தார்க்காவ்ஸ்கிக்கு வருகிறேன்
ReplyDeleteIvans childhood படம் மட்டும்தான் ஒரளவுக்கு எளிமையான படம்.அது மட்டும் பார்த்துள்ளேன்
ReplyDelete@ கொழந்த
ReplyDeleteஉங்கள் எழுத்து நடையே ஓவியம் போல் தான் இருக்கிறது... படத்தைப் பார்க்க தூண்டுகிரது... (மெய்யாலுமா) இதை நிச்சயம் பார்த்துவிட்டு மீண்டும் வந்து பதிவிடுகிறேன்....
ச்ச... மன்னிக்கவும்... அது பதிவிடுகிறேன் இல்லை.. (பயப்படவேண்டாம்) பின்னூட்டமிடுகிறேன்.....
ReplyDelete@பனித்துளி சங்கர்
ReplyDeleteகண்டிப்பா படத்த பாருங்க..பிடிக்கும்.
@denim
எத்தனை பதிவுகள் என்பத விட பிடிச்ச மாதிரி எழுதணும்,கடனுக்கேன்னு பதிவு போடக்கூடாதுன்னு நினச்சதால் இந்த தாமதம்
@உலக சினிமா ரசிகன்
//என் போன்ற பாமரனுக்கு கடினம்//
நீங்களே பாமரன்னா நான் Sub-பாமரன். அதான் சொன்னேனே ..புரிஞ்சது கால்வாசி தான்னு
@RNS
உங்களுக்கு வஞ்சப்புகழ்ச்சி அணி இயல்பா வருது...அதை மேலும் மெருகேத்தலாமே...
//An artist never works under ideal conditions. If they existed, his work wouldn`t exist, for the artist doesn`t live in a vacuum. Some sort of pressure must exist. The artist exists because the world is not perfect. Art would be useless if the world were perfect...//
ReplyDeleteஅருமையான அறிமுகம் கொழந்த... மீண்டு மீண்டு படித்துக்கொண்டே இருக்கிறேன் இந்தப் பதிவை..... எனக்குத்தெரிந்து பதிவுலகிலேயே திரும்பத் திரும்ப படிக்க வைத்த பதிவு இதுதான்... ஆழ்ந்த வார்த்தைகள்...சீக்கிரம் படத்தை பார்க்கிறேன்....
கொழந்த
ReplyDeleteமிக நல்ல அறிமுகம் நான் ஐஎம்டிபி இல் இந்த படத்தை பார்த்து தரவிறக்க மனம் வராமல் இருந்துவிட்டேன்,முழுக்க படித்தேன்,இதோ விரைவில் பார்த்துவிடுகிறேன்.உங்கள் தேடுதல் தொடர்ட்டும்,இந்த கமர்ஷியல் உலகில் தலைவர் பாஸ்கரன் இன்னும் இது போல நிறைய படங்களை வினியோகித்து அறிமுகம் செய்யட்டும்.
@RNS
ReplyDelete//எனக்குத்தெரிந்து பதிவுலகிலேயே திரும்பத் திரும்ப படிக்க வைத்த பதிவு இதுதான்//
ஏன் அடிக்கடி நெட் கட் ஆயிருச்சா????
இப்படி எல்லாம் உசுபேத்தி ஓவர் மண்டக்கணம் வரப் போகுது...
@கீதப்ப்ரியன்
//இதோ விரைவில் பார்த்துவிடுகிறேன்//
கண்டிப்பா பாருங்க..என்ன பெரிய தேடுதல்..எல்லாம் உங்கள் மாதிரி ஆட்களிடம் இருந்து கத்துக்கறது தான்
அந்திரே ருபெலோவ் பற்றி தெரியாத தவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி கொழந்த...
ReplyDelete//எனக்கு இருக்கிற மிகச் சிறிய சினிமா அறிவை வைத்து சில விஷயங்களை சொல்ல ஆசைப்படுகிறேன்.//
ஹய்யோ ஹய்யோ அண்ணனுக்கு என்னா தன்னடக்கம். மெய்சிலிர்க்குது...
//ஒரு கவிஞரிடம் போய் நீங்க ஏன் கவிதை எழுதறீங்கனு கேட்பது எவ்வளோ அபத்தமோ //
அப்படியா...அப்போ ஒரு உலகத்தர பதிவர்கிட்ட, ஏன்டா நீயெல்லாம் பதிவு எழுதுறன்னு ஒருத்தர் கேட்டாரு அது நல்லகேள்வியா அபத்தமான கேள்வியா கொழந்த...?
ஹீஹீ அந்த அந்த உலகதர பதிவர் நான்தேன்...
@நாஞ்சில் பிரதாப்..
ReplyDelete//ஹய்யோ ஹய்யோ அண்ணனுக்கு என்னா தன்னடக்கம்.//
இப்படி எல்லாம் ஏத்தி விடுங்க..அப்பறம் மிதப்புல தான் அலையப் போறேன்..
//அப்போ ஒரு உலகத்தர பதிவர்கிட்ட, ஏன்டா நீயெல்லாம் பதிவு எழுதுறன்னு ஒருத்தர் கேட்டாரு//
யாரு அந்த புண்ணியவான்...நாங்க கேட்க நினைச்சத அவர் கேட்டுட்டாரு...அவர் பாதம் பணிகிறேன்
நல்லது பாத்துட வேண்டிதான்.. இன்னும் இப்படி அதிகம் தெரியாத படங்களை அறிமுகப்படுத்தவும்.. நன்றி :
ReplyDelete@பிரசன்னா
ReplyDelete//நல்லது பாத்துட வேண்டிதான்//
பாருங்க..கண்டிப்பா ஒருவித தாக்கத்தை உணருவீங்க....நன்றி
நல்ல படம்..நல்ல பதிவு..
ReplyDeleteலிங்குக்கும் சென்று பார்த்தேன். அவர் வரைந்த பாதி படங்களில் ஆட்கள் தலை கவிழ்ந்த மாதிரி இருக்கிறார்களே...
@JZ
ReplyDeleteநீங்களும் பார்த்துவிட்டு சொல்லுங்கள்...
ஏன் உங்கள் தளத்தில் புதுபதிவுகள் இல்லை...
சீக்கிரம் பாத்துடறேன்.
ReplyDelete//ஹீஹீ அந்த அந்த உலகதர பதிவர் நான்தேன்...//
நாஞ்சிலாரே நீங்க சொல்லாமலே அது நீங்கதான்னு எங்களுக்குத்தெரியுமே...