Thursday, October 28, 2010

Dead Man - முடிவற்ற பிரயாணம்


தட்கல் தொல்லைகள் ஏதும் இல்லாத, எப்ப வேணும்னாலும் எடுக்கக்கூடிய,எப்ப எடுத்தாலும் confirm ஆகிற ரயிலோ-பிரயாணமோ இருக்கா?இருக்கு.எல்லோருக்கும் அந்த வண்டில நிச்சயம் ஒரு இடம் உண்டு.ஆனா எப்ப என்பதில்தான் சுவாரஸ்யமே...சில பேர் தானே விரும்பி அந்த வண்டில ஏறிருவாங்க. சில பேருக்கு போக விருப்பமிருந்தும் காத்திருப்பு பட்டியல்ல தான் இடமிருக்கும்.இன்னும் சில பேரை உறவினர்கள் புடை சூழ வந்து வழியனுப்பி வைப்பாங்க.சில பேர் வண்டி பிளாட்பாரத்தை விட்டு கிளம்பும்போது அவசரமாக வந்து ஏறுவாங்க.நம்ம ஸ்டேசனுக்கும் அந்த வண்டி ஒருநாள் வரத்தான் போகுது.ஏற்கனவே சொன்ன மாதிரி எப்ப என்பதில்தான் சுவாரஸ்யம் - திரில் எல்லாம். அது என்ன வண்டி என்பது உங்களுக்கே இந்நேரம் தெரிஞ்சிருக்கும்.

                           
பில் ப்ளேக் - என்ற மனிதன் கிளீவ்லாண்ட் ஊரிலிருந்து மெஷின் என்ற ஊருக்கு ரயிலில் சென்றுகொண்டிருப்பதுடன் படம் ஆரம்பிக்கிறது. அங்கு ஒரு கம்பெனியில் அக்கௌன்டன்ட் வேலையில் சேர வரச்சொல்லி அனுப்பப்பட்ட கடிதத்துடன் அங்கு செல்கிறான். போன பிறகுதான் தெரிகிறது அவன் சேர வேண்டிய வேலையில் வேறொருவர் சேர்ந்திருப்பது.இது குறித்து அக்கம்பெனியின் முதலாளியிடம் கேட்கச் சென்று - அவரது கோக்கு மாக்கான நடவடிக்கைகளால் கலவரமடைந்து வெளியே வருகிறான். கையில் வேறு சுத்தமாக காசில்லை. இந்நிலையில் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைக்க அவளுடனேயே அன்றிரவை கழிக்கிறான். மறுநாள் காலை அப்பெண்ணின் முன்னால் காதலன் அங்கு வர,அதில் ஏற்படும் தகராறில் அப்பெண்ணும் - காதலனும் இறக்க நேரிடுகிறது.ப்ளேகும் காயமடைகிறான். கொலைப்பழிக்கு அஞ்சி ப்ளேக் காட்டிற்குள் காதலனின் குதிரையில் தப்பிக்கிறான்.ரத்தப் பெருக்கால் நினைவிழக்கிறான். இதற்கிடையே அவனால் சுடப்பட்ட காதலன் - அவன் வேலை தேடி வந்த கம்பெனியின் முதலாளியின் மகன். அவன் தலைக்கு அவர் விலை வைக்கிறார்.இதற்காக பிரத்தியேகமாக மூன்று ஆட்களை - இதுபோன்ற செயல்களில் நிபுணர்களை - நியமிக்கிறார். அதுபோக யார் ப்ளேக்கை உயிருடனோ-பிணமாகவோ கொண்டு வந்தாலும் பரிசு என்று போஸ்டர் கூட ஒட்டுகிறார்.

                                                                                
அடர்ந்த காட்டிற்குள் கண்விழிக்கும் ப்ளேக் தன் முன் ஒரு பழங்குடியின செவ்விந்தியன் நிற்பதையும் அவனே தனக்கு சிகிச்சை அளித்ததையும் உணர்ந்து கொள்கிறான். அந்த செவிந்தியனின் பெயர் - Nobody. அவன் ப்ளேகின் பெயரை கேட்க இவனும் சொல்ல - செவிந்தியன் இவனை William Blake என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கவிஞராக கற்பிதம் செய்து கொள்கிறான். தனக்கு William Blakeன் கவிதைகள் என்றால் உயிர் என்றும் தான் அடிமையாய் இருந்த போதும் அதிலிருந்து தப்பி வந்த போதும் அனைத்து பயணத்திலும் அவரின் கவிதைகளே உந்துசக்தியாக இருந்ததாக ப்ளேக்கிடம் கூறுகிறான்.Nobody ப்ளேக்கிடம் உங்களைப் போன்ற கவிஞர்களுக்கு உகந்த இடம் இதுவல்ல-உங்களை கடலைத் தாண்டி இருக்கும் அமைதியான ஒரு இடத்திற்கு அனுப்பி வைப்பது என் பொறுப்பு என்று சூளுரைக்கிறான்.ஏற்கனவே நீங்கள் ஒரு வெள்ளையனை சுட்டிருக்கிறீர்கள்..மேலும் பல வெள்ளையர்களை அழிக்க வேண்டிய கடமை நமக்குள்ளது என்று கூறி இருவரும் சேர்ந்து பல சண்டைகளில் ஈடுபட நேர்கிறது. ப்ளேக் Nobodyன் கிராமத்திற்குச் செல்ல நேர்கிறது. அங்கே வெள்ளையர்கள் பழங்குடியினர்களுக்கு எதிராக புரிந்த கொடுமைகளைக் கண்டு திகைப்படைகிறான். இந்நிலையில் அவனை கொல்ல அனுப்பப்பட்ட 3 பேரில் ஒருவன் ப்ளேக்கை தொடர்ந்து அக்கிராமத்திற்கே வந்துவிடுகிறான்.அவனால் ப்ளேக் என்ன ஆனான்-Nobody என்ன ஆனான் இதுவே மீதிக் கதை.


முதல்முதலில் காட்டப்படும் ரயில் பிரயாணம் - ஊர்களின் பெயர் - ஆட்களின் பெயர்: Nobody - வசனங்கள்:   
        
                                                Nobody: Did you kill the white man who killed you? 
                                    William Blake:  I'm not dead. Am I?

      இதிலிருந்தே சில விஷயங்களை புரிந்து கொள்ளலாம்.நீங்கள் பார்த்திங்கன்னா உங்களுக்கே புரியும். சில பேருக்கு வெறும் படமாக தோணலாம். சில பேருக்கு அதிலுள்ள உள்ளார்ந்த அர்த்தம் புரியலாம். எனக்கு முதல்முறையாக பார்க்கும் போது குழப்பமாக இருந்தது. இணையத்தில் மேற்கொண்டு இப்படத்தின் விமர்சனங்களை படித்தே இவ்விஷயங்கள் குறித்து ஓரளவு அறிந்துகொள்ள முடிந்தது.படம் முழுவதும் அத்தனை குறியீடுகள். இசை,ஒளிப்பதிவு முதற்கொண்டு எங்கும் அக்குறியீடுகள் வியாபித்திருக்கிறது. இசை - புகழ் பெற்ற கிடாரிஸ்ட் Neil Young.

              படத்தின் டைரக்டர் அமெரிக்காவைச் சேர்ந்த Jim Jarmusch. இவரின் படங்களை Zee Studioவில் ரெண்டு-மூணு வருஷத்திற்கு முன் தொடர்ச்சியாகப் போட்டார்கள். அதில் நான் பார்த்த ரெண்டு படங்கள் - Dead Manனும் Coffee & Cigaretesசும். இதுல Dead Man என்ற தலைப்பே மிகக் கவர(Johnny Deppம் ஒரு காரணம்) அந்த படத்தை தேடிப்பிடித்து மறுபடியும் சமீபத்தில் பார்த்தேன்.Coffee & Cigaretes கிடைக்கவில்லை. அதுவும் ஒரு அலாதியான கதை: 11 குறுங்கதைகளின் தொகுப்பு.அனைத்து கதைகளையும் இணைக்கும் விஷயம் Coffee மற்றும் Cigaretes. சில கதைகளில் சிகரெட்டின் தீமைகள் குறித்து சிலர் casualலாக உரையாடிக்கொண்டிருப்பார்கள், சில கதைகள் காபி சிகரட் குடித்துக்கொண்டு தங்கள் சொந்த வாழ்கை குறித்து சுவாரசியாமாக சிலர் பேசிக் கொண்டிருப்பார்கள். ரொம்பவே வித்தியாசமான திரைப்படம். முழுவதும் பார்க்க முடியவில்லை.சிலது மட்டுமே ஞாபகம் இருக்கு.சிலவற்றை விக்கிபீடியா பார்த்து தெரிந்து கொண்டேன்.இந்தப் படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா.....


Facebookers..

19 comments :

  1. Its Interesting கொழந்த :)

    ReplyDelete
  2. அட, அதுக்குள்ள ஒரு கமெண்டா...

    ReplyDelete
  3. வேலை காரணமாக வேறு ஊரில் இருப்பதால் - இன்னும் கம்ப்யூட்டர் வேற எடுத்திட்டு வரல ,draft இருந்து வெளியிடுகிறேன். பின்னுட்டங்கள் லேட் ஆகும். செம போர். நெட் வேற இல்ல.வீடு வேற கிடைக்க மாட்டேங்குது. ரோடு ரோடா அலையுறேன்.

    @இராமசாமி கண்ணண் ]
    தல...என் பதிவுக்கு எவ்வளவு விரைவா பின்னுடமா????? ரொம்ப நன்றி. படம் பாருங்க. கண்டிப்பா பிடிக்கும்

    ReplyDelete
  4. @சு.மோகன்
    //அட, அதுக்குள்ள ஒரு கமெண்டா//

    நானும் பி.பா ஆகிட்டேன் . இவ்வளவு சிக்கிரத்தில கம்மேண்டா ????

    ReplyDelete
  5. //அது என்ன வண்டி என்பது உங்களுக்கே இந்நேரம் தெரிஞ்சிருக்கும்.//

    சரிதான் மிர்தாத் வேலை செய்யறாரு...

    பார்க்க வேண்டிய பங்க லிஸ்டு ஏறிட்டே போகுது...

    ReplyDelete
  6. //கொளந்தையை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை,காணாமல் போகும் போது வெள்ளை நிற பனியனும்,ஊதா நிற அறை கால் டவுசரும் அணிந்து இருந்தார்,இவரை யாராவது கண்டு பிடித்தால் காதை பிடித்து தரதர வென இழுத்து வருமாறு கேட்டுகொள்ளபடுகிறோம் - denim mohan//

    கொழந்த ஒரு திருவிழாவுக்கு போச்சா..அங்க தொலஞ்சு போச்சு...

    ReplyDelete
  7. //சரிதான் மிர்தாத் வேலை செய்யறாரு...//
    மிர்தாத் படிக்கும் முன்னாடியே எனக்கு இது தோணிருச்சு. உங்களைப் போல,RNS மாதிரி ஆட்கள் பார்த்திட்டு சொல்லுங்க..

    ReplyDelete
  8. ஐயா..யாரவது வேலூர்-காட்பாடி பக்கம் ஏதாவது வீடு(ஒரு ஆள் தங்க) இருந்தா சொல்லுங்க. VIT university பக்கம் இருந்தா ரொம்ப நல்லது. முடிஞ்சா சொல்லுங்க - kolandha1985@gmail.com

    ReplyDelete
  9. கவித்துவமாக சைட் அடிக்க விரும்பும் கொழந்தப் பசங்களுக்கு வீடு கிடைப்பது கஷ்டம்னு மிர்தாத் சொல்லியிருக்கார்...

    ReplyDelete
  10. //VIT university பக்கம் இருந்தா ரொம்ப நல்லது. முடிஞ்சா சொல்லுங்க

    குழைந்தாய் பூமியே நமக்கு வீடு, வானமே நமக்கு எல்லை,புல்,பூண்டு இயற்கை எல்லாம் நமக்கு உற்ற நண்பர்கள்.


    உன்னக்கு ஏன் வேண்டும் வீடு,அங்ஙானாத்தை விடு, மெய் ஙானத்தை அடை

    அய்யா சாமி , மிர்தாத் பதிவு படிச்சக்கே இந்த எபெக்ட், முழு புக்கையும் படிச்சா..................................

    ReplyDelete
  11. நண்பரே,

    நான் இவற்றை பார்த்ததில்லை. காலம் கூடிவரவேண்டும்! அதற்குள் வண்டி வரமால் இருந்தால் சரி :) இருப்பினும் நல்ல கட்டைப்பிரம்மச்சாரிகள் 100Km சூழ்ந்திருக்கும் ஏரியாவில் உங்களிற்கு வசதியான தங்குமிடம் கிடைத்திட வேண்டுகிறேன் :)

    ReplyDelete
  12. @மொக்கராசா,

    //அய்யா சாமி , மிர்தாத் பதிவு படிச்சக்கே இந்த எபெக்ட், முழு புக்கையும் படிச்சா..........//

    அதுதான் அங்க கமெண்டு போடாம இங்க வந்து போட்டுக்கிட்டிருக்கீங்களா?

    ReplyDelete
  13. நீங்க பார்த்தீட்டீகளா?

    இதென்ன குழந்தைதனமான கேள்வியா இருக்கு. இன்னமும் எந்திரன் காய்ச்சலே இங்கு அடங்கல. அப்புறம் எங்கே இது போன்ற படங்கள் எல்லாம்?

    என்னவொரு அர்பணிப்பு. விக்கி யெல்லாம் பார்த்து என்னை விக்க வைத்து விடுவீங்க போலிருக்கு குழந்த.

    ReplyDelete
  14. பகிர்வுக்கு நன்றி.. :)

    ReplyDelete
  15. கொழந்த உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கேன்

    ReplyDelete
  16. கொழந்த
    வேல எப்புடி இருக்கு?
    எனக்கும் புது இடம் மாறியதால,இங்க இண்டர்நெட் இல்லை,தொடர்ந்து படம் பார்த்து கண்வீங்கியது தான் மிச்சம்.

    இந்த படம் பார்க்கலை,விரைவில் பார்க்கப்படும்.காஃபி அண்ட் சிகரட்ஸ் ம் பார்க்கப்படும்.இது போல வித்தியாசமான படம் விரும்பும் உங்களுக்கு இன்னொரு படம்
    angelas ashes
    இது ஐயர்லாந்தின் துலாபாரம்னு சொல்லலாம்,ஆனால் 40களின் ஐயர்லாந்து கண்முன்னே விரியும்.அப்படி ஒரு இயக்கம்,நாவலை சிதைகாமல் எடுத்துள்ளனர்.பார்த்துவிட்டு சொல்லுங்க.

    ReplyDelete
  17. மீண்டும் ஒரு சுவாரசியம்! அருமை!
    நண்பா எப்படி இருக்கீங்க! வேலை எப்படி செல்கிறது? எல்லாம் நலமாக அமையும்.

    ReplyDelete
  18. @மொக்கராசா
    மொக்கராசா..
    எங்க தங்க ராசா..நீங்க மொக்கைக்கே ராசா...

    @கனவுகளின் காதலன்
    நீங்க சொன்னது ஏறக்குறைய உண்மையாயிருச்சு....

    @ஜோதிஜி
    அர்பணிப்பு....உங்களுக்கு வஞ்சப்புகழ்ச்சி வஞ்சமில்லாமா வருது...

    @Saravana Kumar MSK
    கருத்திற்கும் வருகைக்கும் நன்றி :)

    @மைதீன்
    சாரி..இப்பதான் பார்த்தேன்..

    @கீதப்ப்ரியன்
    தல..உங்களுக்கு மெயில் அனுப்புறேன்.

    @எஸ்.கே
    தல..உங்களுக்கும் மெயில் அனுப்புறேன்...கூடிய விரைவில் நேரேயே சந்திப்போம்.

    ReplyDelete
  19. அர்பணிப்பு....உங்களுக்கு வஞ்சப்புகழ்ச்சி வஞ்சமில்லாமா வருது...

    அட இப்பத்தான் உள்ளே வந்தேன். என்னால ஒன்று முடியாலைன்னா அதை மத்தவங்க செய்யும் போது குண்டக்க மண்டக்க பாராட்டி தள்ளிவிடுவேன். இந்த துறை ரொம்ப தூரம் நமக்கு(?) இப்பச் சொல்லுங்க ராசா.

    ReplyDelete