Empty your mind, be formless. Shapeless, like water. If you put water into a cup, it becomes the cup. You put water into a bottle and it becomes the bottle. You put it in a teapot it becomes the teapot. Now, water can flow or it can crash ..... Be water my friend
மதுரை - 1970களிள் ஒரு நாள். ஒரு அதிரடியான திரைப்படம் மாப்ளை விநாயகரில் வெளியாகிறது.விருதுநகரில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஒருவர் - படங்கள் பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர் - மதுரைக்கு வந்து அந்தத் திரைப்படத்தைக் காண்கிறார். மிகப்பெரிய அளவிலான ஒரு தாக்கத்தை அவருள் அந்தப் படம் உண்டு பண்ணுகிறது.மறுபடியும் அந்தப் படத்தை அடுத்த நாளும் பார்க்கிறார்.ம்ஹும்...அப்படியும் ஆர்வம் அடங்கவில்லை.இதுபோல 3 - 5 - 7 - 8 என்று எட்டு முறை அந்தப் படத்தை பார்ப்பதற்காகவே விருதுநகரில் இருந்து மதுரை வந்து செல்கிறார். அவர் - என் அப்பா.அந்தப் படம் - என்டர் தி டிராகன். எங்கப்பா முதல்முதலாக அந்தப் படத்தை பார்க்கும் போது என்ன மனநிலையில் இருந்தாரோ அதே மனநிலை - குதூகலம் அனைத்தும் ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சியில் இப்படத்தை மறுபடியும் காணும் போது அவருக்கு இருக்கும். போன தலைமுறையை சேர்ந்த அவரைப் போன்ற ஆட்களை எந்த அளவிற்கு அப்படமும் ப்ரூஸ்லீயும் ஈர்த்திருந்தனரோ - அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் என் தலைமுறையும் - இதற்கடுத்த தலைமுறையையும் ப்ரூஸ்லீ முழுவதுமாக வசீகரித்துள்ளார். நான் எத்தனையோ ஹீரோக்களை திரையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால் ப்ரூஸ்லீ அளவிற்கு வசீகரமான Screen- Presence உள்ள ஹீரோவை நான் பார்த்ததில்லை. இந்த கட்டுரையை ஏன் எழுத ஆரம்பித்தேன் என்றால் How Bruce Lee Changed the World என்ற ஹிஸ்டரி சேனலின் டாகுமெண்டரியை காண நேர்ந்தது. அதன் விளைவே இந்தக் கட்டுரை.
டாகுமெண்டரியின் முக்கிய நோக்கம் லீயின் பிறப்பு வளர்ப்பு, திரைப்பட வாழ்க்கை இவைகளை மட்டுமே பேசும் ஆவணப்படமாக இல்லாமல், லீயின் தனித்தன்மை - வாழ்க்கை குறித்து அவரது கோட்பாடுகள் - அவரது வாழ்க்கை முறை - முக்கியமாக லீயின் வரவால் உலகளவில் மார்ஷல் ஆர்ட்ஸ் கலைகளின் தாக்கம் குறித்தே.அதனாலேயே இதை ஒரு முக்கியமான டாகுமெண்டரியாக நான் கருதுகிறேன்
ஹாங்காங்கில் தன் வீட்டருகே ஒரு தெருச் சண்டையில் லீ மும்முரமாக இருந்தார்.அந்த சண்டையில் அவர் தோற்க நேரிடுகிறது.லீ முதலும் கடைசியுமாக தோற்ற சண்டை அது ஒன்றுதான்.அதற்குப்பிறகு யாராலும் எந்த சூழ்நிலையிலும் அவரை தோற்கடிக்க இயலவில்லை. தோல்வியுற்றது அவரை பெரிதும் பாதிக்கிறது. அதற்ககாகவே ஒரு குங்-ஃபூவை முறையாக கற்றுக்கொள்ள முடிவெடுத்து ஒரு மாஸ்டரை நாடுகிறார். அவர்தான் Yip Man என்றழைக்கப்பட்டவராவார்.வுங் சுன் என்ற கலையின் நிபுணர்.லீயின் வாழ்வில் பெரிய மாறுதலை உண்டு பண்ணியவர்.அவர் வெறும் சண்டை முறைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் வாழ்வியல் முறை சார்ந்த தற்காப்பு கலைகளையே பெரிதும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.அவரது சொற்கள் லீயின் மனதில் வெகு ஆழமாகவே பதிந்து விட்டன. தெருச் சண்டைகளுக்காக பள்ளியில் மிகுந்த “நல்ல” பெயர். பலமுறை அவரது பெற்றோரை ஆசிரியர்கள் கூப்பிட்டு கண்டிக்க செய்தனர்.ஆனாலும் அவர் அடங்குவதாய் இல்லை.பெரிதாக ஒன்றும் படிக்கவும் இல்லை.ஆனால் இசை - நடனங்களில் சிறு வயது முதலே மிகுந்த நாட்டம் உள்ளவர்.
1959, தன் பதினேழு - பதினெட்டு வயதில் கையில் சொற்ப பணத்துடன் ஹாங்காங்கிலிருந்து அமெரிக்காவிற்கு வருகிறார். வாஷிங்டன் யூனிவர்சிட்டியில் நாடக மேற்படிப்பு மேற்கொள்கிறார். இடையே அனைத்து நாட்டின் தத்துவங்களையும் அளப்பரிய ஆர்வத்துடன் படிக்கிறார். இதற்கிடையே காதல் திருமணமும நடைபெறுகிறது. குங்-ஃபூ கற்றுக் கொடுக்கும் பள்ளியை ஆரம்பித்து ஓரளவு அந்தப் பகுதியில் பிரபலமடைய ஆரம்பிக்கிறார்.ஒரு கண்காட்சி போட்டியில் அவரைப் பார்த்த தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர் ஒருவர் The Green Hornet என்ற ஆங்கிலத் தொடரில் நடிக்க அழைப்பு விடுக்கிறார்(இந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட ஒரு நிகழ்வு ரொம்பவே முக்கியமானது. அதை பிறகு பார்ப்போம்).பின்னர் படிப்படியாக முன்னேறி Enter the dragon என்ற அவரது நான்காவது படமும் வெளியானது. The rest is history. ஆனால் அந்த படம் வெளியான போது அவர் உயிருடன் இல்லை. வெறும் தற்காப்பு கலைகளுடன் மட்டும் நின்று விடாமல் நடனம், பாக்சிங் போன்றவைகளிலும் திறமையான ஒருவராக விளங்கினார். தேடித்தேடி படிப்பதிலும் ஆர்வம் உடையவர். அவர் ஒரு Perfectionist. இதுதான் வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் தான் நினைத்த மாதிரி வரும் வரை எந்த விஷயத்தையும் விடுவதில்லை. அவர் இருந்திராவிட்டால் ஹாங்காங் சினிமா வெளிய தெரிய இன்னும் பல ஆண்டுகள் கூட ஆகியிருக்கும். மேலும் அவரது தாக்கம் எந்த அளவிற்கு – எந்தெந்த துறைகளில் எல்லாம் இருந்தது என்பதை இந்தப் படத்தை பார்க்கும் போது தெரிந்து கொள்வீர்கள். மேலும் ரெண்டு விரல்களாலேயே தண்டால் எடுப்பது – ஒரு குத்தில் எதிராளியை கதிகலங்கச் (One inch punch) – மின்னல் வேகத்தில் தாக்குவது என்று அவரின் திறமைகள் அதிகம். அவர் தாக்கும் வேகத்தை படம் பிடிக்க முடியாமல் 34 ஃபரேம்களாக குறைத்து படமேடுத்தனர். இதெல்லாம் கடும் உழைப்பினால் வந்தவைகள்.உழைப்பு என்றால் அளப்பரிய உழைப்பு. மனம் சொல்வதை உடல் செய்யும் உழைப்பு. விசையுறு பந்தினைப் போல ஒரு உடம்பு.
The Green Hornet தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு முக்கிய நிகழ்ச்சி ஏற்பட்டது என்று சொன்னேன் இல்லையா...ஒரு கராத்தே போட்டிக்கு லீயை ஒருவர் சண்டைக்கு வரச் சொல்லி சவால் விட லீயும் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார்.ஆனாலும் மிகுந்த மன உளைச்சல்.ஏன்.....சண்டையில் ஜெயிக்க மூன்று நிமிடங்களுக்கு மேல் ஆனதே அதற்குக் காரணம்.தான் இதுவரை கற்றதை வைத்து ஒருவரை இவ்வளவு நேரங்கழித்தா தோற்கடிப்பது என்று ஒரே வருத்தம். இதுவே அவரை ஜி-குன்-டோ என்று அழைக்கப்படும் பல்வேறு வகையான மார்ஷல் ஆர்ட்களின் கலவையான ஒரு சண்டைப் பயிற்சி முறையை கண்டறியத் தூண்டியது. மேலும் உடற் பயிற்சிகளில் மேலதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். கிட்டத்தட்ட ஆறு மைல் அளவிற்கு ஓடுவதும், சொந்தமாக பல்வேறு உபகரணங்களை வடிவமைப்பதும் என்று பல பயிற்சிகளில் ஈடுபட்டார்.
ஜி-குன்-டோ:
ஒரு ஜென் கதை.சிறந்த வில்லாளி ஒருவன்,தான் சிறப்பான வில்லாளன் தானா என்ற சந்தேகத்தை போக்கிக்கொள்ள ஜென் குருவை நாடுகிறான்.எல்லா பயிற்சியும் முடிந்து வந்தவனிடம் "எங்கே உனது வில்லும் அம்புகளும் ?" என்று ஒருவன் கேட்க, இனி தனக்கு அது தேவையில்லை என்று கூறிச் செல்கிறான். வில் - அம்பு எதுவும் இல்லாமலேயே பார்வையாலேயே அனைத்தையும் வீழ்த்தும் ஆற்றல் உடையவனாக இருந்தான்.உண்மையான ஆற்றல் கொண்டவன் எப்போதும் தன்னை வெளிப்படுத்துவதில்லை. பலவீனமானவனும் பயந்தவனும் மட்டுமே ஆற்றல உள்ளவர்கள் போல் தங்களை வெளிக்காட்டிக் கொள்வார்கள்.இந்தக் கதையில் வரும் வில்லாளியைப் போன்ற மனநிலை கொண்டவர்தான் லீ.
ஜி-குன்-டோவின் அடிப்படை கோட்பாடே மேற்ககூறிய கதையில் அடங்கியுள்ளது. The art of fighting without fighting, style without style – இதுவே அதன் சாரம்சம்.எதிராளி நம்மை தாக்குவதற்கு முன்பாகவே மனதளவில் அவர்களை தோற்கடிப்பது.இதை விட ஒரு சண்டையில் உச்சம் என்ன இருக்க முடியும். அதையும் மீறி அடிக்க வருபவரை எவ்வளவு சீக்கிரம் வீழ்த்த முடிகிறது என்பதும் முக்கியம்.அதற்கு ஒரு கலையை மட்டும் உபயோகிப்பது போதுமானதாக இருக்காது என்று கருதி பல கலைகளில் இருந்தும் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டார். இதை நான் மேல கூறியுள்ள மேற்கோளில் காணலாம்.சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளவது இந்தக் கலையின் முக்கியக் கோட்பாடாக இருந்தது. மேலும் ஜி-குன்-டோ நடைமுறை சண்டைகளில் பெரிதும் கவனம் செலுத்தியது. தேவையில்லாத சண்டைகளில் ஆற்றலை செலவழிக்கக் கூடாது என்பதும் இதன் இன்னொரு முக்கிய அம்சம்.இதை லீயின் பல சண்டை காட்சிகளில் காணலாம். முதல் அடியை பெரும்பாலும் அவர் அடிப்பது இல்லை.

பி.குகள்:
- அவரது முக்கிய குருவான Yip manயைப் பற்றி ஏற்கனவே இரண்டு படங்கள் வெளிவந்திருந்தாலும் கூட உலகப் புகழ் பெற்ற ஹாங்காங்கின் Wong - kar -wai எடுக்கும் The Grandmasters என்ற திரைப்படம் அடுத்த ஆண்டு வெளிவரயிருக்கிறது. தனக்குள் இருக்கும் லீயின் வெறியனுக்காக இந்த படம் என்று அவரே கூறியிருக்கிறார்.
- அனைவரும் கையோடு இங்கே அப்படத்தை தரவிறக்கி பார்க்க வேண்டும்.
- இந்த வீடியோக்களையும் பாருங்கள்.
பிப்ரவரி மாசமே இந்த படத்த பாத்துட்டேன். அப்பதான் எங்கப்பாவுக்கு சீரியஸ் ஆனதே...சரி....வீட்டுக்கு வந்திருவார்.....நெறய கேட்டுட்டு எழுதலாம்னு பாத்தேன்...என்னவோ நடந்திருச்சு.சரி..விடுங்க...மொதல்ல டவுன்லோட் பண்ணி யாராவது பாத்திட்டு சொல்லுங்க..
ReplyDeleteYip Man - ன்னு ஒரு படம் வந்து இருக்கே அதுக்கூட ப்ரூஸ்லீ பத்தி தானா....??
ReplyDeleteயோவ்...அதான் எழுதியிருக்கேனே...அவரது குருநாதர் பத்தி.....நேத்து படம் பாத்தீங்களா....இல்லையா..ஒண்ணும் சொல்லல....
ReplyDeleteப்ரூஸ் லீ... மறக்கவே முடியாது. எனக்கு லீ தெரிஞ்சது எண்டர் த ட்ராகன் இல்லை. ‘திசை மாறிய கப்பல்கள்’ & ‘கார் பந்தயம்’ படிச்சித்தான் - ராணி காமிக்ஸ். அதில் ஒன்றில், பர்னபாஸ் என்ற வில்லன் கூட வருவான். மேற்படி தகவல்களுக்கு, என் உயிர் நண்பன் - காமிக்ஸ் & திரை என் சைக்கிள புடிய்யா பாலுவை அழைக்கிறேன் (இவன் ப்ளாக் எழுத வந்தா, நாமெல்லாம் இழுத்து மூடிக்கினு போக வேண்டியதுதான். ஆனா வர மாட்டான்.. இவன் எழுத வராத தைரியத்துல தான் நான் எழுதிக்கினு இருக்கேன்)..
ReplyDeleteஆச்சரியம் - என் தந்தையுடன், ப்ரூஸ்லீ - அ ட்ராகன் ஸ்டோரி’ படத்தை, கோவை மாருதியில் பார்த்திருக்கிறேன். அதில் மறக்காத காட்சி - பிக்பாஸ் படத்தில், பின்னாலிருந்து தாக்கும் அடியாளின் லுல்லாவில் சதக்கென்று ப்ரூஸ்லி கத்தியால் குத்துவது.
கட்டுரையை ரசித்துப் படித்தேன். லீயைப் பார்க்கும்போதெல்லாம், சிறுத்தை நினைவு வரும். சூப்பரான ஆர்டிக்கிள். My salutes !
மிஸ்டர் கொழந்த,
ReplyDeleteஅருமையான நினைவுகளை மீளகொனர்ந்த இந்த அருமையான பதிவுக்கு நன்றி.
புரூஸ் லீ என்னுடைய நண்பர்களின் பலரின் வாழ்விலும் (குறிப்பாக ஏழை, மத்தியதர வர்க்கத்தினரின்) ஒரு வினையூக்கியாகவே இருந்ததை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
//எனக்கு லீ தெரிஞ்சது எண்டர் த ட்ராகன் இல்லை. ‘திசை மாறிய கப்பல்கள்’ & ‘கார் பந்தயம்’ படிச்சித்தான் - ராணி காமிக்ஸ். அதில் ஒன்றில், பர்னபாஸ் என்ற வில்லன் கூட வருவான். மேற்படி தகவல்களுக்கு, என் உயிர் நண்பன் - காமிக்ஸ் & திரை என் சைக்கிள புடிய்யா பாலுவை அழைக்கிறேன் (இவன் ப்ளாக் எழுத வந்தா, நாமெல்லாம் இழுத்து மூடிக்கினு போக வேண்டியதுதான். ஆனா வர மாட்டான்.. இவன் எழுத வராத தைரியத்துல தான் நான் எழுதிக்கினு இருக்கேன்)//
நானும்கூட முதன்முதலில் புரூஸ் லீயை பற்றி தெரிந்து கொண்டது ராணி காமிக்ஸ் மூலமாகவே - நாங்கள் ஆந்திராவில் (ஹைதராபாத்தில்) இருந்தபோது. 1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் ராணி காமிக்ஸில் புரூஸ் லீயின் முதல் கதை (வைர சுரங்கம் - 51st issue) வெளியானது.அதன் பின்னர் அவரது கதைகளை தேடிப்பிடித்து முத்து காமிக்ஸ் வாரமலர், இந்திரஜால் காமிக்ஸ் என்று பல இதழ்களில் படித்துள்ளேன்.
பை தி வே, பர்னபாஸ் வருவது கார் பந்தையம் கதையில்.
கிங் விஸ்வா
அருமையான கிளாசிக் நாவல்கள் - காமிக்ஸ் வடிவில் - இன்டியா காமிக்ஸ்
இந்த பதிவுக்கு சற்றும் சம்பந்தமில்லாத விளம்பர கமென்ட்: புரூஸ் லீயின் முழுநீள காமிக்ஸ் பதிவொன்று ரெடியாக உள்ளது - அவரது நினைவு நாளன்று அது தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் வெளிவரும்.
ReplyDeleteகிங் விஸ்வா
அருமையான கிளாசிக் நாவல்கள் - காமிக்ஸ் வடிவில் - இன்டியா காமிக்ஸ்
தல காலைல கமெண்ட் போடுறேன்
ReplyDeletehats off to u boss ...hee hee no like button here
ReplyDeleteபுரூஸ்லீயின் எண்டர் த டிராகன் சென்னை ஆனந்த் தியேட்டரில் ரீலிஸ் ஆகி ஒரு வருடம் ஒடியது.பகல் 3.45 காட்சிக்கு காலை 10 மணிக்கே அரங்கு நிரம்பும் கூட்டம் நெரியும்.நான் அப்போது பதினாறு வயது பாலகன்.படம் ஏ சர்டிபிகேட் பெற்றதால் என்னை அனுமதிக்கவில்லை.ஆனந்த் உரிமையாளர் திரு.உமாபதி கண்டிப்புடன் திருப்பி அனுப்புவார்.200 நாள் கழித்துதான் படம் பார்த்தேன்.என் டீசர்ட்,நோட் புத்தகம் எல்லாமே புரூஸ்லீ மயம்.இந்தப்படத்தின் விளைவாக அப்போது வெளியான எம்ஜியார் படங்கள் எதுவுமே சரியாகப்போகவில்லை[ஊருக்கு உழைப்பவன்,உழைக்கும் கரங்கள்].காரணம் வாத்தியார் ரசிகர்கள் புரூஸ்லீக்கு மாறிவிட்டார்கள்.
ReplyDeleteபுரூச் லீ படங்களில் பொயட்டிக் வயலன்ஸ் இருக்கும்.அது இப்போது வரும் படங்களில் காணக்கிடைக்காத ஒன்று.
சிறு வயதில் லீ பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கின்றேன்,அவர் படத்தில் வரும் சண்டைக்காட்சியில் கூட உண்மைலேயே அடிப்பார் என பேசிக்கொள்வார்கள்,மேலும் அவர் படத்தில் நான் முதலில் பார்த்தது என்டர் தி டிராகன்,பார்த்தது என்று சொல்லுவதை விட பார்த்து வியந்தது என்று சொல்லலாம்,இந்த பதிவு லீ பற்றி மேலும் சில தகவல்களை அறிய உதவுகின்றது,உமது கலைப் பணியை தொடர வாழ்த்துக்கள்,
ReplyDeleteயோவ் பதிவு ரொம்ப நல்லா கீதுயா...
அவரது மரணத்தைப் பற்றி எழுதவில்லையே ?
ReplyDeleteஅப்பாலிகா நேற்று இரவு தான் நெட் சரியானது என்று இரவு அல்லது நாளை பதிவு வரும் ,
ReplyDeleteஐயோ எனக்கு லீனா உசுரு தல ,நீண்ட நாட்களாக உங்கள் பதிவை படித்து வருகின்றேன்,அனால் இந்தப் பதிவு என்னை கமெண்ட் இடும்படி தூண்டியது,மிக அருமையான பதிவு,லீயீன் அனைத்து படங்களையும் பார்த்துளேன்
ReplyDeleteஎன்டர் த டிராகன்
த பிக் பாஸ்
ரிட்டன் ஆவ் த டிராகன்
ஃவிஸ்ட் ஆவ் ஃவியூரி
வே ஆவ் த டிராகன்
ஐந்தே படங்களுக்குள் உலகம் அவரை மறக்கமுடியாதவாறு செய்துவிட்டார்,இதற்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள Perfectionist தான் காரணம்,நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரு நல்ல பதிவை படித்த திருப்தி
நான் இங்க ஒரு கமெண்ட் போட்டேனே எங்க போச்சு ?
ReplyDelete@கருந்தேள் கண்ணாயிரம்....
ReplyDeleteலீய பத்தி காமிக்ஸ்ல வந்ததே இப்பதான் தெரியுது....
// லீயைப் பார்க்கும்போதெல்லாம், சிறுத்தை நினைவு வரும் // இந்த மாதிரி உவமைகள் எல்லாம் ஏன் எனக்கு தோண மாட்டேங்குது.......வேற எங்கயாவது அடிச்சுவுடுறேன்...
பாலு - அவர எப்புடியாவது உள்ள இழுத்துருவோம்......
@King Viswa
நன்றி.
// புரூஸ் லீ என்னுடைய நண்பர்களின் பலரின் வாழ்விலும் (குறிப்பாக ஏழை, மத்தியதர வர்க்கத்தினரின்) ஒரு வினையூக்கியாகவே இருந்ததை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்//
ஒல்லகுச்சி உடம்புக்காரர்களுக்கு அவர் அளித்த - அளித்துக்கொன்டிருக்கும் தைரியம் ரொம்ப அதிகம். மேலும் அவர் படங்களில், சண்டை காட்சிகளில் - துப்பாக்கி போன்ற ஆயுதங்கள உபயோகபடுததுன மாதிரி தெரியல....கைகள் அதிகம் - அப்பறம் நங்சக்
லீ பத்தி காமிக்ஸ் பதிவா - ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.....
@Amizhthini
லைக் பட்டன் இல்லாட்டிதான் கமெண்ட் வருமோ....நன்றி....
@உலக சினிமா ரசிகன்
நன்றி.
படம் தியேட்டரில் ரீலீஸ் ஆன போது பாத்தவங்க சொன்னா நல்லாயிருக்கும் நெனச்சேன்.கரெக்ட்டா நீங்க வந்திட்டீங்க.....நன்றி சார்.......இப்ப கூட அந்த படத்த ரீ ரீலீஸ் பண்ணா - அந்த படத்த தவிர - தமிழ்நாட்டுல எல்லா தியேட்டர்களும் காத்தாடும் என்பது உறுதி.
@டெனிம்
அவரது மரணம் - ஏதோ அவர் உட்கொண்ட வலி நிவாரண மருந்தின் பக்க விளைவினால ஏற்பட்டதுன்னு பெரும்பாலானவங்க - அவர் மனைவி உட்பட - சொல்றாங்க. மாபியா கும்பல் கைங்கரியம் என்றும் சில பேர் சொல்றாங்க.....
// உமது கலைப் பணியை தொடர வாழ்த்துக்கள் // உஸ்ஸ்ஸ்ஸ்..........முடியல
@இடிதாங்கி
அதான எங்க போச்சு...வரதே நாலஞ்சு கமெண்ட்.....அதுவும் இப்புடி எங்கயாவது போச்சுனா...சரி..என்ன போட்டிருந்தீங்க......
This comment has been removed by the author.
ReplyDeleteநானும் கேள்வி பட்டுளேன் அவரது மனைவிதான் காரணம் என்று,இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅட போயா அத டைப் பண்ணுறதுக்குள்ள உயிர் போய்டுச்சு சரி திரும்ப எழுதறேன்,இடிதாங்கியா இருந்துகிட்டு இத கூட தாங்கலனா எப்படி ?
ReplyDeleteஐயோ லீ ந எனக்கு உசுரு தல,உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்து வருகின்றேன்,ஆனால் இந்த பதிவு கமெண்ட் போடுமாறு தூண்டியது,அவரது அனைத்து படங்களையும் பார்த்துளேன்
என்டர் த டிராகன்
த பிக் பாஸ்
ரிட்டன் ஆவ் த டிராகன்
ஃவிஸ்ட் ஆவ் ஃவியூரி
வே ஆவ் த டிராகன்
ஐந்தே படத்தில் இவ்வளவு பிரபலம் ஒருவரால் ஆகமுடிந்தது என்றால் அதற்க்கு நீங்கள் குறிபிட்டு இருக்கும் Perfectionist தான் காரணம்,கண்டிப்பாக இந்த உலகம் அவரின் சாதனைகளை இழந்து விட்டது ,இன்னும் இருபது வருடங்கள் இருந்து இருந்தால் எந்தளவிற்கு வந்து இருப்பார் ,நீங்கள் எனக்கு தெரியாத தகவல்கள் நிறைய எழுதி உளீர்,
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பதிவு படித்த திருப்தி,இனி உங்கள் அனைத்து பதிவுகளிலும்,என் கமெண்ட் டை எதிர் பாருங்கள்
//அதான எங்க போச்சு...வரதே நாலஞ்சு கமெண்ட்....//
ReplyDeleteஎன்னாது நாலு கமெண்ட் தான,பதிவுகள ஜாப்மவான் நீங்கள் உங்களுகே இப்படி ஒரு நிலைமை,இருங்க நம்ம சொந்த காரங்களுக்கு சொல்லி விட்டு இருக்கேன் ஒவ்வ்ருதரா வருவாங்க
why?????????????????????????????????????
ReplyDeleteஉங்கள் வாசகர்களின் கமெண்ட் டை இப்படிதான் delete செய்வதா ?
ReplyDelete// நானும் கேள்வி பட்டுளேன் அவரது மனைவிதான் காரணம் //
ReplyDeleteநா எங்க அப்புடி சொன்னேன்....அதெல்லாம் ஒண்ணுமில்ல....ரெண்டு பேரும் லவ் மேரேஜ் செஞ்சவங்கதான்........பக்க விளைவுகள் தான் காரணம்...
@இடிதாங்கி
This post has been removed by the author - நல்ல கமெண்ட. இததான் காணோம்னு சொன்னீங்களா.....
நம்ம நண்பர் கொழந்த எழுதி இருக்கும் இந்த பதிவிற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில்,இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி,இந்த இரண்டு சமகால புருஸ் லீ யை அறிமுகப் படுத்துவதில் பெருமை அடிகின்றேன்
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=bHUT1crUGaA
http://www.youtube.com/watch?v=oe0cHwfEQRM
முதல் வீடியோ வில் அவர் தாக்கும் வேகத்தை படம் பிடிக்க முடியாமல் 34 ஃபரேம்களாக குறைத்து படமேடுத்தனராம்,வெறும் உடல் பலத்தை மட்டும் நம்பாமல் – உண்மையான கோபமும் பலமும் மனதில் இருந்தே வர வேண்டும் எனபதை அவர் முகத்தை பார்க்கும் யாராலும் தெரிந்து கொள்ள முடியும்.
ReplyDeleteஇரண்டாம் வீடியோவில் 34 fbs கேமரா கிடைகாதாதால் தானே 34 fbs க்கு ஏற்றவாறு தனது அங்க அசைவுகளை மாற்றிக்கொண்டாராம்
ReplyDeleteமிஸ்டர்....இடிதாங்கி....உங்க கமெண்ட்கள் எல்லாம் Spamமில் போய் உக்காந்திருந்தன.....இப்பதான் ரீலீஸ் செய்தேன்...
ReplyDeleteபதிவுலகத்துக்கு நீங்க புதியவரா...இப்ப தான் இந்த பெயரையே கேள்விப்படுகிறேன்.......
// நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பதிவு படித்த திருப்தி,இனி உங்கள் அனைத்து பதிவுகளிலும்,என் கமெண்ட் டை எதிர் பாருங்கள் // ஒரே....புல்லரிப்பு போங்க.....
:) ... neththum office vara vaichutaanga ... indha week kullaa paathuduven.. Download panniten.. :)
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteலீ யை பிடிக்காத ஆக்ஷன் பட ரசிகர்கள் அரிதானவர்க்ளே. எண்டர் தி ட்ராகன் பின்னணி இசை எனக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அக்காலத்தில் அவர் போட்டோ இல்லாத சலூன்கள் இல்லை எனலாம். வயிறை எக்கிப் பிடித்துக் கொண்டு இரு கைகளையும் முறுக்கி கொண்டு நிற்கும் அப்போஸ் உலகப்போஸ். வில்லனின் இரும்புக் கரத்தால் கீற்ப்பட்ட நார் உடலில் ரத்தக்கோடுகள் படிந்திருக்க அவர் நிற்கும் அந்தக் கோலமே, மச்சான் அடுத்த அடி மரண அடி என்பதை சொல்லி விடும். ஒரு தற்காப்பு கலையை உலகெங்கும் ரசிக்க வைத்த அருமையான கலைஞர். இந்தக் கட்டுரை உங்கள் படைப்புக்களில் மிக முக்கியமான ஒன்று. கனகச்சிதம். வ்வூய்ய்ய்ய்யாகூகூஉய்ய்ய்யு... :)
பி.கு ப்ருஸ்லீயின் அந்த கிராஃபிட்டி கலக்கல்.
அனிமேஷன் மூலமா ஒருத்தர tribute பண்ணுறத நான் முதன் முதல்ல பார்த்தது ப்ருஷ் லீக்கு செய்த அனிமேஷன் க்ளிப்லதான்.. அதால அதோட லிங்க இங்க கொடுத்துட்டு போறேன்..
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=-76oUUCxqBw
முழுமையான பதிவு கொழந்த!!
//அவர் தாக்கும் வேகத்தை படம் பிடிக்க முடியாமல் 34 ஃபரேம்களாக குறைத்து படமேடுத்தனர்// ONE INCH PUNCH லைன்-ங்றது இதுதானோ??
அப்புறம்.. உங்க ஊரில் எடுத்த அந்த போட்டா அழகாக இருந்திச்சு.. எடுத்துக்கிட்டேன்!
ReplyDelete(அதுல வேட்டி-சட்டையோட வர்றாரே, அவர அடிக்கவா ப்ரூஸ் லீக்கு 3 நிமிசம் எடுத்திச்சு??)
@αηαη∂..
ReplyDeletepadam paarthivittu sollavum...
@கனவுகளின் காதலன்
நண்பர்களே...காதலரோட கமென்டில் முக்கியமான ஒண்ண கவனிச்சிங்களா..........
// இந்தக் கட்டுரை உங்கள் படைப்புக்களில் மிக முக்கியமான ஒன்று //
நா ஒரு படைப்பாளி ஆயிட்டேன்.......வ்வூய்ய்ய்ய்யாகூகூஉய்ய்ய்யு...
என்டர் தி டிராகன் பின்னணி இசை ஆக்சன் படங்களில் ரொம்பவே முக்கியமானதாக இருந்திருக்கிறது என்று ஒரு டாகுல பாத்தா ஞாபகம்......
@JZ
// உங்க ஊரில் எடுத்த அந்த போட்டா அழகாக இருந்திச்சு.. எடுத்துக்கிட்டேன் // என் புகழ் திக்கெட்டும் பரவட்டும்.....மொதல்ல படத்த டவுன்லோட் பண்ணி பாத்துட்டு சொல்லுங்க....
@JZ உதிர்த்தது
ReplyDelete//அனிமேஷன் மூலமா ஒருத்தர tribute பண்ணுறத நான் முதன் முதல்ல பார்த்தது ப்ருஷ் லீக்கு செய்த அனிமேஷன் க்ளிப்லதான்.. அதால அதோட லிங்க இங்க கொடுத்துட்டு போறேன்..
http://www.youtube.com/watch?v=-76oUUCxqBw//
இந்த கிளிப் மாயா முதன் முதலில் அறிமுகமான போது உருவாக்கப் பட்டது,எந்த டெக்னாலஜியும் இலாத காலத்தில் maya 1.0 (இப்ப 8.5 எல்லாம் தாண்டி 2012 வரைக்கும் வந்து விட்டது )மிக அருமையாக தத்ருபமாக லீ யை உருவாக்கி இருப்பார்கள்
அப்போதைய பள்ளி சிறுவர்களிடம் ப்ரூஸ்லீ படம் போட்ட எந்த பொருளையும் மார்க்கெட் செய்துவிடலாம்.நான் பள்ளி சீருடை வெள்ளை சட்டையில் ப்ரூஸ் லீ அயன் ஸ்டிக்கரை தள்ளுவண்டி அயன் கடையில் தந்து பதித்து வாங்கினேன்,அந்த சட்டை தான் மிகவும் பிடித்தமானது அப்போது.ப்ரூஸ் லீயின் எல்லா படத்தையும் பார்த்து விடுவேன்,ப்ரூஸ்லீயின் படம் நிறைய பார்த்தது மதுரை நியூசினிமாவிலும்,பல்லாவரம் தேவி,லட்சுமியிலும் தான்.ரிபீட் ஆடியன்ஸ் நான்.
ReplyDeleteWay of the Dragon அல்லது Return of the Dragon என அழைக்கப்படும் ப்ரூஸ் லீயின் படத்தை நான் 1989 நியூசினிமாவில் பார்த்தேன்,அதில் ஒரே ஒரு டாப்லெஸ் காட்சி உண்டு,இருந்தும் படத்தை ஒருவர் பார்க்காமல் விடக்கூடாது என்றே என் அண்ணன் ஒருவர் அதற்கு கூட்டிச்சென்றார்.ப்ரூஸ்லீ மற்றும் சக்நார்ரிஸ் மோதுகின்ற இறுதிக்காட்சியை ஒருவர் தவறவே விடக்கூடாது,அதன் பின்னர் சக்நார்ரீஸுக்கு மிகபெரிய அளவில் புகழ் கிடைத்தது.முக்கியமாக சக்நார்ரீஸின் மார்பு ரோமத்தை பிடுங்கி ப்ரூஸ்லீ ஊதும் இடத்தை கவனியுங்கள்.ஆயிரம் ரஜினி அவர்.
http://en.wikipedia.org/wiki/Bruce_Lee
http://www.bruceleefansite.com/images/bruceleedeath.jpg
ReplyDeleteஇது திறந்த சவப்பெட்டியில் ப்ரூஸ்லீ உடல் வைக்கப்பட்டபோது எடுத்த படம்
இது ப்ரூஸ்லீ சாவுக்கு காரனமாக இருந்த வலிநிவாரணி மருந்து
http://en.wikipedia.org/wiki/Equagesic
இதில் பல அருமையான தகவல்கள் அவரின் வீடு படம் எல்லாம் உண்டு
http://www.bruceleefansite.com/bruce-lee-death.html
நல்ல கொசுவத்தி கொழந்த