Friday, March 30, 2012

கடவுள்களும் மதங்களும் geneகளின் சேட்டையா - 2


இன்று பல கடவுள்கள் நிறைய "அற்புதங்களை" நிகழ்த்தித்தான் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. Survival of the fittest. இல்லையென்றால்சக்திமிக்கதொரு வேறொரு கடவுளைத் தேடி மக்கள் சென்று விடுவர். மூலவர்களுக்கே இந்த கதி என்றால் பூசாரிகளுக்குகாற்றிலிருந்து கோல்ட் வாட்ச் வரவழைத்த சாய்பாபா முதல் நடக்க முடியாதவர்களை நடக்க வைக்கும் பேர்வழிகள் வரை பல உதாரணங்களைக் கூறலாம். 

அந்தரத்தில் மிதக்க வைப்பேன் என்று யாராவது சொன்னால், அறிவியலை நம்பும் ஆட்கள், இதைப் பற்றி சட்டை செய்யக்கூட மாட்டார்கள். காரணம்மிக எளிது. அந்தரத்தில் மிதப்பது என்றால் - புவியீர்ப்பு விசை இருப்பது அறிவியல்பூர்வமான உண்மை. அதற்கெதிராக செயல்பட இன்னென்ன வழிமுறைகள் உள்ளன எனபது நமக்குத் தெரியும். ஆகஒரு நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைக்கெதிராக செயல்படும் போது - மிக அதிகமான சான்றுகள், நிரூபணங்கள் தேவை. ஒருவரும் இதுவரை உருப்படியான ஒரு நிரூபனத்தையும் தந்ததில்லை(ஏறக்குறைய எல்லா அற்புதங்களின் போதும் இதுதான் வாடிக்கை). ஆகவே இதுபோன்றதொரு action - based வழிமுறையை நம்பி இவர்கள் இறங்கியதால்அறிவியலின் பணி சுலபமாகப் போயிற்று. 

இதுவே ஒரு தனிப்பட்ட அனுபவமாக முன்னிறுத்தப்படும் போது?  இதுதான் மிகப் பெரிய சிக்கலே.எப்படியோ பல பேர் நம்புகின்ற அற்புதம் போன்ற விஷயங்கள் மெல்ல மெல்ல படர்ந்து குழுக்கள் சார்ந்த நம்பிக்கையாகஒரு மாபெரும் குமிழியாக உருவெடுக்கும் போதெல்லாம் அறிவியலின் துணை கொண்டு பல பேர் அக்குமிழியை உடைத்ததிருக்கின்றனர். ஆனால், தனிப்பட்ட அனுபவங்கள் என்று வரும் பொழுது, அறிவியல் அதை விளக்க ஒரு காலத்தில் சிரமப்பட்டது உண்மை. ஏனென்றால் இது முழுக்க முழக்க மூளை சார்ந்த விஷயம். முன்னர் எல்லாம் இந்தளவுக்கு மூளையின் நடவடிக்கைகளை நுணுக்கமாக பதிவு செய்யும் வசதிகள் இல்லை. கடந்த இருபது வருடங்களாக, அளப்பரிய தொழில்நுட்ப வளர்ச்சியினால் இந்தக் குறை தீர்ந்தது.சக்திவாய்ந்த எலெக்ட்ரான் மைக்ரோஸ்கொப்களை பயன்படுத்தினால் கூட, அது உமிழும் ஒளியானது மூளையை ஆராய இடையுறாக இருந்தததால், புறுஊதா கதிர்கள் கொண்டு இயங்கும் மிக மிக உன்னிப்பாக மூளையை ஆராயும் அளவிற்கு உபகரணங்கள் வந்து விட்டன. And the best part of science is, போதும் என்றே நினைக்காமல் இன்னும் இன்னும் என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பது. 
------------------------------- 
நேற்றிரவு கடவுள்(irrespective of religion) என்னுடன் அமர்ந்து Last temptation of jesus christ படம் பார்த்தார். நான் இதுபோன்றதொரு ஸ்டேட்மென்ட் விடுகிறேன். இதை எப்படி இல்லை என்று மறுப்பீர்கள் ? (மறுபடியும் ரஸ்ஸிலின் teapot உதாரணத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளவும்). எத்தனை பேர் இதனை நம்புவார்கள் அல்லது குறைந்தபட்சம் சீரியசாகவாவது எடுத்துக் கொள்ள முயல்வார்கள். (இதே போன்றதொரு அறிக்கையை முக்கிய இடத்தில இருக்கும் ஒரு பிஷப் வெளியிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது எத்தனை பேர் இதனை நம்புவார்கள்எதனடிப்படையில் இவர்களது நம்பிக்கை மாறும் இந்த கோணத்தை வைத்தே பல பதிவுகள் எழுதலாம்)

மேல நான் சொன்ன பிரசன்னத்தை நம்பாதவர்கள் - நம்புகிறவர்கள்என்ற இரு பிரிவினரையும் தாண்டிநிச்சயம் ஒரு சாரர் எனது கூற்றை ஏற்றுக் கொள்ள சங்கடப்படுவார்கள் (கவனிக்க: சங்கடப்படுவார்கள்). கடவுள் குறித்த நம்பிக்கை இருந்தாலும்ஏன் இவர்கள் இதனை ஏற்க சங்கடப்பட வேண்டும் அவர்களின் மூளையில் எங்காவது ஒரு ஓரத்தில் – either knowingly or unknowingly - இது சாத்தியமில்லை என்று இதுகுறித்து சந்தேகத்தை (அ) தெளிவை இவர்களிடம் எழுப்பியது எதாக இருக்க முடியும் ?  

இந்த கேள்வியைப் பற்றி யோசித்துக் கொண்டே இருங்கள். கேள்வியை அப்படியே freeze செய்துவிட்டு அடுத்த பதிவில் தொடருவோம். இப்பொழுது கொஞ்சம் மூளையப் பற்றிப் பார்ப்போம். இது மிக மிக முக்கியம். படிக்க அசதியாகக் கூட இருக்கலாம். ஆனால், மூளை தூண்டுகிறது - மூளையில் பதிகிறது - அதை செய்கிறது இதை செய்கிறது என்று வெறும் வாயில் முழம் போடுவதை விட, தகுந்த தகவல்களுடன் பகிர்ந்தால் விஷயங்களை சொல்ல ஏதுவாக இருக்கும் என்ற ஒரே காரணம் தான்.
--------------------------- 
உடம்பின் மொத்த எடையில் வெறும் 2%. ஆனால் இயங்க, 25% சக்தியை எடுத்துக் கொள்கிறது. மூளை. இயற்கையின் உச்சகட்ட டிசைன் இதுதான் எனலாம் - எந்த உயிரினமாக இருந்தாலும் சரி. ஒருசில வரிகளில் இதன் மகத்துவத்தை விளக்குவது கடினம். நீங்களே, இதை படிப்பதை நிறுத்திவிட்டு....................சிந்தியுங்கள்.  

இன்றளவும் விஞ்ஞானிகளை அதிசயப்பட வைக்கும், மூளையின் இரண்டு அம்சங்கள், அதன் கணிக்க முடியாதன்மை (unpredictability) மற்றும் நெகிழ்வுத்தன்மை(elasticity). ஒரு சூழ்நிலைக்கு ஏற்றவாறு எப்படி அது ரியாக்ட் செய்கிறது என்று உறுதியாக அறுதியிட்டு கூறவியலாது. ஒவ்வொரு அனுபவத்திற்கும் ஏற்ப தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது. ஒவ்வொரு வகையான செயலுக்கும் ஒரு குறிப்பட்ட பகுதியை மூளையே நியமித்து வைத்திருக்கிறது.

மூளையை, அதன் செயல்பாட்டை வைத்து மூன்று பகுதியாக பிரித்திருக்கின்றனர். 
  • Hind brain
  • Limbic system
  • Neocortex
 அதன் துணைப் பிரிவுகளை படத்தில் காணலாம். 
தகவல்களை திரட்டியது இங்கிருந்து.               படம் எனது வேலை

Source: Click here

----------------------------------------------------------

நாம் நம் புலன்களின் வழியாக உள்வாங்கும் விஷயங்களை எப்படி மூளை தன்னகத்தே பதிவு செய்யும் ? சுருக்கமாக ஒரே பதிலில் சொன்னால், நியூரான்கள். மூளை + முதுகுத் தண்டு என்று மொத்தமான நரம்பு மண்டலம் அனைத்திருக்கும் மிக மிக அடிப்படையான விஷயம், இந்த நியூரான்கள் தான். Nothing but nerve cells. இந்த செல், தபால்காரர்கள் போல. உடம்பு முழுமைக்குமான செய்திகளை மூளையிலிருந்து அதற்குரிய இடங்களுக்கும் & vice - versa, எடுத்து செல்வதுதான் இதன் வேலை.


ஒரு ஸினாரியோவைப் பார்ப்போம். க்ளீன் ஸ்லேட்டாக இவ்விஷயத்தை அணுகினால் மட்டுமே விளக்க சுலபமாக இருக்கும். உங்கள் ரீடரில் இந்தப் பதிவைப் பார்க்கிறீர்கள். உங்கள் கண் பார்க்கிறது. உடனே கண், மின் அலைகளை(Electrical impulses) மூளைக்கு அனுப்பும். என்னவென்று ? இதுபோல கொழந்தையின் புதுபதிவு ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளது. கண் அனுப்பும் electrical impulsesகளை மூளைக்கு கடத்திச் செல்ல ஒரு ஆள் வேண்டாமா ? அதுதான் நியூரான்கள். ஒருவித ரிலே ரேஸ் மாதிரி தான் இந்த நிகழ்வுகள். ஒரு நியூரான் to மற்றொரு நியூரான் to அடுத்த நியூரான் to அடுத்த நியூரான் என்று இந்த செய்தி போகும். சரி, ஒரு நியூரானும் மற்றொரு நியூரானும் எப்படி அந்த செய்தியை பரிமாறிக்கொள்ளளும்? Neurotransmitters. இந்த ட்ரான்ஸ்மிட்டர்கள் தான், பார் உன் காலில் முள் குத்துகிறது, உனக்கு பிடித்த பாடல் டிவியில் ஓடிக் கொண்டிருக்கிறது போன்ற நாம் முழுமையாக உணரும் விஷயங்கள் முதல், இதயம் - நுரையிரல் என்று அதது அதனதன் வேலையைச் செய்யவென்று - இதுபோல நம் உணராமலே நடக்கும் விஷயங்கள் உட்பட - அனைத்திருக்கும் காரணம்.
Source: Click here
மேலிருக்கும் படத்தைப் கொஞ்சம் சற்று பொறுமையாக கவனித்தாலே சுலபமாக புரிந்து விடும். ஒரு நியூரான் மற்றொரு நியூரானுக்கு (Axonகள் வழியாக) செய்தியை அனுப்புகிறது. செய்தியை வேர் போன்ற அமைப்பின்(Axon Terminal) மூலமாக பரிமாறிக் கொள்ளும். அதனை ஜூம் செய்து தனியாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். ஒரு வேர் மற்றொரு வேரை தொடும் இடத்தில் தான் நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் வெளியேறும். வெளியேறியவற்றை வாங்கிக் கொள்ள ஏதுவாக, ரிஸப்டார்கள்(Receptors) தயாராக இருக்கும். செய்தியை வாங்கிக் கொண்டு, இந்த ரிஸப்டார்கள் மறுபடியும் மின்வேதியில் வினைகளுக்கு(Electrochemical reaction) உட்பட்டு, மறுபடியும் வேரைச் சென்றடையும். 


இதில் என்ன முக்கியாமான விஷயம் என்றால், ஒவ்வொரு விஷயத்திற்கும் மூளை தனியாக நியூரான்கள் வைத்திருக்கின்றன. கொழந்தையின் பதிவா, மொக்கை - கருந்தேளின் பதிவா, படிக்கலாம் - பாலாவின் பதிவா, அவர் எழுதுவதே இல்லையே, என்று முடிவு செய்யும். பதிவு என்பது ஒரே விஷயம் தான் அதில் துணைப் பிரிவுகளாக இது பிடித்தது, இது பிடிக்காதது, இது தேவையில்லை என்று ஏற்கனவே பிரித்து வைத்திருந்த விஷயத்தை மறுபடியும் கோழி கிளறுவது போல கிளறிப் பார்க்கும். இந்த ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும், பிடித்த பதிவர் - மொக்க பதிவர் - பிடிக்காத பதிவர் - காமெடிப் பதிவர், அவரவரது பதிவுகள் என்று - தனித்தனியாக நியூரான்கள் இருக்கின்றன(Specialised neurons). மூளை இந்த பிரிக்கும் வேலையை கற்பனைக்கும் அப்பாற்பட்ட வேகத்தில் நடத்தி முடிக்கும். படிக்க ஆரம்பிக்கும் போதே இதை மூளை முடிவு செய்துவிடும். நீங்கள் முன்முடிவுகளை எடுக்கக் கூடாது என்ற வைராக்கியத்துடன் இருக்கலாம். ஆனால், மன்னிக்க. மூளை நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்றாலும் அதனை செய்து முடித்துவிடும். ஒருவேளை படித்த பிறகு முடிவில் சிறிது மாறுதல் ஏற்படலாம். அப்பொழுது மூளை அதற்கேற்றவாரு சில மாறுதல்களை செய்துகொள்ளும். ஒருவேளை தொடர்ந்து நீங்கள், முன்னர் மொக்கை என்று நினைத்திருந்த பதிவை - நல்லாயிருக்கே என்று ரசிக்க தொடங்கினால், அதையும் சேமித்து வைத்துக் கொள்ளும். ஆனால், ஒரு போதும், அந்த பழைய - இதுமொக்கை - நினைப்பு மறையாது அல்லது மறைவது மிகக் கடினம்.


மூளையியை மடல்களை(lobe), மடிப்புகள் போன்று இருக்குமே - அதன் செயல்பாட்டை வைத்து நான்கு பகுதிகளாக பிரித்திருக்கின்றனர். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. (கீழே படத்தில் உள்ளது). 
ஆக, பதிவு -> எழுத்து -> அப்படி என்றால் communication, அதற்குரிய மூளையின் பகுதி முதலில் தூண்டப்படும்.Temporal lobe will be initiated.  அதே சமயத்தில் இந்தப் பதிவைப் படிக்கலாமா வேண்டாமா - யார் எழுதியது - இவர் இப்பொழுது எழுதுவதே இல்லையே, என்று எல்லாவற்றையும் சடுதியில் மூளை முடிவு செய்து(Frontal lobe) அததற்குரிய நியூரான்களை தூண்டிவிடும்.  எத்தனை ஒரு காம்ப்ளெக்சான - அற்புதம் நிறைந்த உறுப்பு, நமது மூளை.

இரண்டு நியூரானுக்கு இடையே செய்தியை பரிமாறும் ட்ரான்ஸ்மிட்டர்கள் குறித்து மேலே குறிப்பிட்டிருந்ததை மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.  நமது உடம்பில் ஏறத்தாழ 40 - 100 வகையான நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் உள்ளன.இதை மூன்று விரிவான பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். அதிலொன்று தான்Biogenic amine neurotransmitters. இதன்கீழ் வரும் முக்கிய நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள்  
  • Serotonin
  • Norepinephrine
  • Epinephrine
  • Dopamine
  • Histamine
  • Acetylcholine 
ஒவ்வொன்றிருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதில் ஒன்றான டொபமைன் தான் பல அதிமுக்கிய விஷயங்களுக்கு காரணம். அது என்னென்ன என்பது அடுத்த பதிவில்.....

கடவுள்களும் மதங்களும் geneகளின் சேட்டையா - 3
Facebookers..

15 comments :

  1. அற்புதம் நிகழ்த்துவது என்பது பார்வையாளர்களை பொருத்தது , பாலை நாம் குடித்தால் சாதாரணம் , சாமி குடித்தால் ( capillary action மூலம் ? ) சரித்திரம் .சாபிட்டதை வாந்தி எடுத்தால் பித்தம் , சாமியார் லிங்கத்தை வாந்தி எடுத்தால் தெய்வ சித்தம் .சாமியாடுகின்றவர்களும் சரக்கடிதவர்களும் ஒரே போல நடந்து கொள்வதை கவனித்திருக்கலாம் , மூளையின் செயல்கள் விசித்திரமானவை ( நமக்கு இன்னும் முழுதாக புரியாத காரணத்தினால் ) .சீக்கிரமே விடைகள் கண்டுபிடிக்கப்படும் . ஒரு சின்ன அமீபாவே சூடான தண்ணீர் சுடும் என விலகிச்செல்லும் அளவுக்கு சிந்தனை ஆற்றல் இருக்கும் பொது , பரிணாமத்தில் சிக்கல் மிகுந்த கூட்டமைப்பாக வளர்ச்சி பெற்ற மனித மூளையின் சிந்தனை ஆற்றல் அளப்பறியாதது . அதை தமிழ் படுத்தி கூறுவது கஷ்டம் என நினைத்திருந்தேன் , முடியாதது எதுவும் இல்லை என சுஜாதாவின் " தலைமை செயலகம் " உணர்த்தியது , அவர் விட்டதை நீங்கள் தொடர வாழ்த்துக்கள் ( அவர் செரடோனின் , எண்டார்பின் லெவெலில் எழுதி இருந்தார் , நீங்களும் டோபமினில் தொடங்கி உள்ளீர்கள் , வாழ்த்துக்கள் ). எல்லாருக்கும் புரியும் படி உள்ளது , மகிழ்ச்சி குழந்தை .

    ReplyDelete
  2. @ Dr.Dolittle

    நன்றி டாக்டர். நான் எழுத நினைச்சு ஆரம்பிச்சது வேற. இப்போது எழுதிக் கொண்டிருப்பது வேற. பாப்போம். எதுவரை போகுதுன்னு.

    அப்பறம், சுஜாதாவின் - தலைமைச் செயலகம், நான் இன்னும் படித்ததில்லை. ஏன் படிக்க தோனலைனு தெரில. ஒருவேள அத்த படிச்சிருந்தா இன்னும் சுவாரசியமா சொல்லி இருக்கலாமோ என்னவோ......

    ReplyDelete
  3. நிச்சயமா. தலைமைச்செயலகம் அருமையான புத்தகம். எதோ 50 வருசம் மூளை ஆப்ரேஷன் பண்ணினவர் எழுதுன மாதிரியே இருக்கும்.

    ஆனாலும்... புத்தகத்திலும், இந்தப் பதிவிலும்.. ஏதோ ஒன்னு அன்னியமா படுது. ஏகப்பட்ட தெரியாத மருத்துவ பேர்கள். எனக்கு அனாசினை விட்ட வேற பேரெதுவும் வாய்ல வராது. அதனாலயோ என்னவோ.

    எனிவே, எனக்கும்.. இந்தப் பதிவைப் பத்தி கொஞ்சம் கன்பீஜ்தான் இருக்கு. தலைப்பை தாண்டி வேற எங்கயோ போகுதோன்னு.

    லெட்ஸ் ஸீ...

    ReplyDelete
  4. @ஆள்தோட்ட பூபதி

    மருத்துவ பெயர்கள எப்படி தமிழ்ல சொல்றதுன்னு ரொம்ப மண்ட குடச்சலா போச்சு. சரி, அப்பிடியே சொல்லிருவோம்ன்னு சொல்லிட்டேன்.

    தலைப்புக்கும் - இதுக்கும் தொடர்பு,......எனக்கும் அந்த எண்ணம் இருக்கு. 'மூளையில் உற்பத்தியாகும் டோபமைன்' இதுதான் நா முதல்ல எழுதன பதிவில் இருந்த வரி......இத அப்புடியே சொல்றத விட தனி பதிவா போட்டா இன்னும் நல்லா புரியும்ன்னு ஏதோவொரு நெனப்புல தோணி எழுதிபுட்டேன்.

    அடுத்த பதிவுல ட்ராக்குக்கு வந்திரும்...

    ReplyDelete
  5. போன பதிவு ஆஸ்ட்ரோலஜியில இருந்திச்சு.. தலைப்புக்கு சம்பந்தமாவே போய்க்கொண்டிருந்தது..

    இன்னைக்கு எங்கெங்கோ கியரெடுத்து, ரிவர்ஸ் எடுத்து நியூரோலஜிக்கு கொண்டுவந்து விட்டிருக்கீங்க! (இன்னும் related-ஆகத் தானே போகுது??)

    மூளையின் செயல்பாடுகள் பற்றி தமிழில் எழுதினாலும் புரிந்து கொள்ளக்கூடியதாக இருப்பது ஆறுதலளிக்கிறது.. வாழ்த்துக்கள் கொழந்த!!

    ReplyDelete
  6. மூளையை ரொம்ப கசக்கி பதிவிட்டிருக்கிறீர்கள்! இன்னொரு தடவை படித்தால்தான் புரியும் என்று நினைக்கிறேன்....


    லைட்டா ஏதாவது படிக்க ஐடியா இருந்தா இங்கே சொடுக்கவும் :)

    ReplyDelete
  7. உங்க மூளையைக் கசக்கி நம்ம மூளையையும் கசக்க வச்சுட்டீங்க. நெக்ஸ்டு பதிவு போட்டதும் டோட்டலா மூணையும் படிச்சுட்டு சொல்றேன். இப்ப மீண்டும் முதல் பதிவு ஸ்டார்.

    ReplyDelete
  8. @JZ

    நன்றி நண்பா......அடுத்த பதிவுல இதற்கான விளக்கம் கிடைக்கும். பொறுமை

    @கார்த்திக்
    நன்றி பாஸ்...

    @ஹாலிவுட் ரசிகன்
    பொறுமையா, படிக்க நேரம் இருக்கும் போது படிச்சு பாருங்க. புரியலாம்.

    ReplyDelete
  9. இப்படி தொடராக எழுதி, முந்தைய மற்றும் அடுத்த பாகக்திற்கு லிங்க் கொடுத்தால், ப்ளாக்கை டெலிட் பண்ணி விடுவார்களா? எனதை அப்படி டெலிட்டிவிட்டார்கள் :( அப்புறம் ரெகவர் செய்தேன்! இணையத்தில் தேடியதில் ஆட்டோ ப்ளாக் என்று ஏதோ ஒரு சங்கதி என்று நினைத்து டெலிட்டியிருப்பார்கள் என தெரிந்தது. உங்களுக்கு இவ்வாறு ஆகி இருக்கிறதா? இதை தவிர்ப்பது எப்படி?

    ReplyDelete
  10. இதை நான் சும்மா ஒரு ஓட்டு ஓட்டிப் பார்த்ததுக்கே சும்மா கிர்ர்ர்ர்ர்ங்குது.. நாளை உக்காந்து பொறுமையா படிப்பேன் .. அப்பால வரேன்

    ReplyDelete
  11. உஸ்ஸ்....தல கலக்குறீங்க!நமக்கு இதை ஒரு பத்து தடவையாவது படிச்சாதான் மண்டையில் கொஞ்சமாவது ஏறும்!படிச்சிட்டு சொல்றேன்!

    ReplyDelete
  12. கொழந்த கலக்குறீங்க... படிக்க தூண்டும் எழுத்து.. பாடம் படிக்கறப்ப தான் புரியலையே, இப்பவாவது படிச்சு புரிஞ்சிப்போம்னு படிச்சேன்.. பல்பா எரியுது, வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  13. ஆங்ங் .. சொல்ல மறந்துட்டேன், படங்கள் எல்லாம் அருமை, படங்களின் துணை புரிந்துக்கொள்ள பேருதவியாய் இருந்தது.. செயல்பாட்டை வைத்து மூளையை பிரிக்கும் உங்கள் chart அருமை..குறிப்பா neurotransmitters படத்தின் வாயிலாக சிறப்பாக புரிந்தது.. இதற்கு பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பும் புரிந்தது, நன்றி!!

    ReplyDelete
  14. @சுரேகா..

    உணர்ந்து படித்ததோடு மட்டுமல்லாமல், கமென்ட் வாயிலாகவும் அத தெரியபடுத்தியதற்க்கு மிக்க நன்றி. அடுத்த பதிவுல, சில reference books லிங்க்கள் தரேன்.அதயும் படிச்சு பாருங்க...

    @விக்கி...
    படிச்சிட்டு சொல்லுங்க....

    @ராஜேஷ்..
    ஒரு மாசம் கழிச்சு இந்த கமென்ட்க்கு என்ன பதில் போட ???

    ReplyDelete
  15. Bro..liked the way u presented..3rd part deleted ah??

    ReplyDelete